அடர் கேசத்தை
அக்காலப் பெண்டிர்
நேர்த்தியாய் பிரித்தெடுத்து
நெற்றி துவங்கி
நேர் வகிடு எடுத்ததுபோல
கருவேலங்காட்டினூடே
கிழக்கேபோகுமொரு
ஒற்றையடிப் பாதை
அக்காலப் பெண்டிர்
நேர்த்தியாய் பிரித்தெடுத்து
நெற்றி துவங்கி
நேர் வகிடு எடுத்ததுபோல
கருவேலங்காட்டினூடே
கிழக்கேபோகுமொரு
ஒற்றையடிப் பாதை
அவ்வழிச் செல்லும்
அருக்கானியொருத்தி
அவள்தன் முன்சென்ற
அத்தானின் காலடிகளை
அழகாய்த் தொடர்ந்தது..
.பத்தாம்பசலியாம்!
அருக்கானியொருத்தி
அவள்தன் முன்சென்ற
அத்தானின் காலடிகளை
அழகாய்த் தொடர்ந்தது..
.பத்தாம்பசலியாம்!

இடை தழுவியவனை
இடக்கையால் படர்ந்து
இவனோடு அவளும்
அவளோடு இவனும்
தலைசாய்த்து
நாலுபேர் புழங்கும்
நடுத்தெருவில்
நடப்பது
நாகரிகமாம்!
குளியலின் கவனக்குறைவால்
காதுக்குள் சிக்கிய
தண்ணீராய்
தாம் தூமெனகாதுக்குள் சிக்கிய
தண்ணீராய்
சப்தமிடும்
முற்போக்கரே...
தொடுதலைவிட
தொடர்தலே
வாழ்க்கையின்
வெற்றிக் கணக்கு!
Sabeer abuShahruk
,sabeer.abushahruk@gmail.comc

LABEL:-
sabeer
3 comments:
இவைகளை
துப்பட்டி போட்டு
வரிக்குள் வளைப்பதும்
கம்பனுக்கு பாதைபோடுவதும்
ஒன்றாகுமா என்ன !
கவிகென்ற காக்காவே (அதிரை வழக்கு மொழி)
கவிவரிகளை ஒரு குயிலிடம் கொடுத்துப் பார்க்க ஆசை...
வருகிறேன் மீண்டும் குயிலின் குரலோடும் !
மனிதா........
கொழுந்து விட்டைரியும்
நரகம்-இதில் உன்னைக்
கொடுக்க உனக்குப்
பயமில்லையா.....
**********************
இரக்கம் என்பதை-உன்
இதயத்திலிருந்து
இறக்கிவைத்தவனா-நீ
இறுதி இடம்
உனக்குண்டு....
தனிமைச் சிறை
தரையுண்டு...
அனைவரும் அழுது
அனாதையாய்ப் போகும்-நீ
அந்த இருட்டரையில்
இருப்பது நீ மட்டும்
******************
கேட்கும் வினாவுக்கு
விடையில்லாமல்
விழிகள் அங்குமிங்கும்
சொருகி
புடைத்த உன் எழும்புகள்
படைத்தவனால்
நொறுக்கப்பட்டு
படுகுழியில் பரிதாபமாய்
இருப்பதற்கு உனக்குப்
பயமில்லையா......
******************
முடிந்த பின்னே
முட்டிக்கொள்வதில்
பயனில்லை
படைத்தவனைப்
பயந்து வாழ்ந்தால்
பயமில்லை....
******************
என்றும் அன்புடன்...
யஹ்யா
ஆனைவிழுந்தான்
ஹொரோவபதான
SRI LANKA
**************************
Post a Comment