Saturday, March 26, 2011

நாளை நமதே

ZAKIR HUSSAIN 5:10 PM


சமீபத்தில் டி வி யில் நாளை நமதே மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் 30 வருடம் பின்னோக்கி செல்லவும்...வலையம் வலையமாய் கற்பனை செய்துகொள்ளவும். இதே படத்தை முத்துப்பேட்டை கீத்துகொட்டகையில் பார்த்தது.கந்தூரி நேரம் 2nd show. முன்பு ஆசை ஆசையாய் பார்த்த சீன் எல்லாம் இப்போது பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது. எம்ஜியார் தம்பியாக வரும் தெலுங்கு நடிகர் ஏதோ மரப்புக்கு துணி தைத்ததுபோல் ஒரு வித்தியாசமான கலரில் கோட்டு போட்டு கிட்டாரை கையில் வைத்து கொண்டு பாட்டுபாடி அண்ணனை தேடுவது "என்ன கொடுமை சார் இது!".

பேப்பர், டி வி எல்லாம் இருக்கும் காலத்தில்தான் படம் எடுத்து இருக்கிறார்கள்.முத்துபேட்டையில் படம் பார்க்கும்போது நம்பியார் தனது ஷூ வில் 8 / 9 நம்பரை காண்பிக்கும்போது, எம்ஜியாருக்கு லேசாக தலை சுற்றும்...எனக்கும் சுற்றியது...டிக்கட் எடுக்க சாப்பிடாமல் நின்றால் தலை சுற்றாதா?. Blood Glucose / Calorie இதெல்லாம் படிக்காத நேரம்.

இது வரை புரியாத புதிர்

எப்படி இது போன்ற லாஜிக் உதைத்த படங்கள் தொடர்ந்து ஓடியது?..

.எப்படி இதுபோன்ற ரயிலில் தொலைந்து போகும் பிள்ளைகளுக்கு சிம்பிலாக பெயர் வைக்கிறார்கள் [ -ம்: விஜய் / ராமு / ராஜா / விஜி ] ஏன் விஜய மார்த்தான்டன் / முத்து ராமலிங்கம் ..அட்லீஸ்ட்..கார்த்திகேயன் என்று வைப்பதில்லை?.எம்ஜியார் ஏன் பணக்காரர்களிடம் கொள்ளையிடுகிறார் என்று இன்றைக்குவரை தெரியவில்லை.அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுப்பது [ நாகேஷ் மூலம்] அப்போதைக்கு பெரிதாக தெரியவில்லை...இப்பொது யாரும் அப்படி செய்தால் ஜெயிலில் களி நிச்ச்யம்.

க்ளைமாக்ஸில் ரயில் எஞ்சினை வைத்து வில்லனை கொல்வது எம்ஜியாரை "ரொம்ப நல்லவே....ண் ' எனும் உத்தி. இவ்வளவு திறமை உள்ள நம்பியார் எப்படி ரயில்தண்டவாள் இடுக்கில் காலை விடுகிரார், லைன் மேன் கூட தன்டவாளத்தை மாற்றி விட்டு அங்கு நிற்கவில்லை என்பதால் லைன்மேன் அப்பா/அம்மாவையும் நம்பியார் & அசோசியெட் கொலை செய்துவிட்டது என்று இப்போதைக்கு ஒரு ரீ-மேக் எடுக்கலாம். லைன் மேன் மகனாக சிம்பு போன்ற நடிகர்கள் இனி வில்லனையும் நம்மையும் பழி வாங்கலாம்.

ZAKIR HUSSAIN

6 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்ன காக்கா எப்போ பிரச்சரத்திற்கு வருகிறீர்கள், கழக கண்மணிகள் காத்துக் கிடக்கிறாய்ங்க தலைவரோட படம் விமர்சம் செய்தே ஓட்டு கேட்கலாம்னு நெனப்பா !?

ZAKIR HUSSAIN said...

நமக்கு சான்ஸ் கொடுக்கமுடியாத அளவுக்கு நிங்கள் எல்லாம் இருப்பதால்...

தேர்தலில் பார்வையாளனாக இருக்க ஆசை

[ தொகுதி கிடைக்காத / தள்ளுபட்ட அரசியல்வாதிகளின் ஸ்டேன்டர்ட் கமென்ட்ஸ் இது]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா புறக்கணிப்பு மட்டும் செஞ்சுடாதிய... அவய்ங்க.. வீடியோவுலாம் எடுக்கிறாங்க இத அப்புறமா ஏதாவது ஒரு சேனலுக்கு வித்து அப்போ ஒரு அரசியல் பன்னத்தான்...

sabeer.abushahruk said...

முரடன் எம்ஜியாரின் ஹேர்ஸ்டைல் ரொம்ப புதுமையாக இருந்ததாக நினைவு. பொதுவாகவே படத்தோட சீரியஸ் காட்சிகளில் சிரிப்பு வந்ததும், நகைச்சுவைக் காட்சிகளில் சீரியஸனா மனநிலை ஏற்பட்டதையும் டைரக்டர் தவிர்த்திருக்கலாம்!

பாட்டுப்பாடி சேர்ந்ததை ரொம்ப பாடுபட்டு சேர்ந்ததுபோல் காட்டியதில் டைரக்டரின் திறமை பளிச்சிட்டது. கதாநாயகி லதா ஸ்க்ரீனுக்குப் பிறகு மேக்கப் இல்லாமல் நல்லா இருந்ததா எம்ஜியார் ஒரு பேட்டியில் சொன்னாராம்.

மொத்தத்தில்...நாளை நமதே...மறுநாளும் நமதே!

sabeer.abushahruk said...

ஜாகிர்,
இந்த மாதிரி படம் பார்ப்பதற்கு முன் அவசியம் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்களை உண்ணக்கூடாது,
வாந்தி பேதி வரும் வாய்ப்புண்டு. ஒத்தையா பார்ப்பதை தவிர்த்து கூட்டமா நெருங்கி உட்கார்ந்து பார்த்தால் அலர்ஜி போன்ற வியாதிகள் அன்டாது, படம் முடிந்தவுடன் குளிர்ந்த நீரில் முகம் கழுவிட்டு படுத்தால் அவ்ளோவ் மேக்கப்போடு லதா கனவில் வருவதிலிருந்தும் தப்பிக்கலாம்... ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்தால் அன்பு மலர்களேன்னு ஆரம்பிக்கும்போதே சேனல் மாத்திடலாம்.

Riyaz Ahamed said...

சலாம்
ஜெயலலிதா தேர்தலில் நின்னா(அரசியலுக்கு வருமுன் ) முதல் ஒட்டு என்னுடையது தான் என்ற ஜாகிரா, உங்களை மாதிரி பலர், பல முறை பார்த்தால் அந்த படம் 100 நாலாவது ஓடுமே லாஜிக் ஒரு தேவையா?

Post a Comment

உமர் தமிழ்