Sunday, December 12, 2010

XIII காலத்தை வென்ற காமிக்ஸ்,....ஹாஜா இஸ்மாயில்

தேன்துளி Then Thuli 2:19 AM

இந்திய காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல் கல்.....

காலத்தை வென்ற காமிக்ஸ்....
"இரத்தபடலம்"  ஒரு சகாப்தம் ...
நான் காமிக்ஸ் என்று எழுதத் தொடங்கியவுடன்,  சில பெரியவர்கள்   முகம்சுளிப்பதும்      , இது  சின்ன  பசங்க விவகாரம்!  என்று நினைப்பதும், நான் ஏதோ   எழுத  கூடாத விவகாரத்தை எழுதுவதாதாக  எண்ணுவதும் சகஜம. ஆனால்   காமிக்ஸ் சிறுவர்கள் விவகார மட்டுமல்ல!!, பெரியவர்கள் விவகாரமும்தான்.



இன்று உலக அளவில் சிறுவர்களுக்கு சமமான அளவில் பெரியவர்களும் காமிக்ஸ் படிக்கிறார்கள்ஜப்பானில் நல்ல நாவல் கூட காமிக்ஸ் வடிவிலேயே வருகிறது. ஐரோப்பா முழுவதும்  பெரியவர்களுக்கு   பொழுது  போக்கே? காமிக்ஸ் படிப்பதுதான்









   




சரி....அதயெல்லாம் விடுங்க... நம்ம  தமிழ்  நாட்டையே  எடுத்து, கொள்ளுங்கள்,    1972 - லிருந்து, வெளி வரும் முத்து கமிக்ஸ்யையும், அதே   குரூப்பிலிருந்து   1986 லிருந்துவரும் , லயன்   கமிக்ஸ்யையும், படிப்பவர்கள்  பெரும்பாலும்  30 வயதுக்கு, மேல் பட்டவர்கள்..  அதாவது  90 % வரை   நம்ப முடிகிறதா?!!

இதில் 70 வயது  80வயது நிரம்பபட்டவர்களும் அதிசயதக்கவகையில் உண்டு.எத்தனையோ  காமிக்ஸ்கள்  கம்பெனிகள்  தொடங்கப்பட்டு  மூடப்பட்டுவிட்டன  அன்றிலிருந்து இன்று  வரை     தொடர்ந்து .. வருவது  லயனும்,   முத்துவும் தான். எல்லா சிறுவர்களுக்கும்  காமிக்ஸ் வங்கி தரப்பட வேண்டும் ,













காரணம்.......அது  "அவர்களுக்கு  தன்னம்பிக்கையும்,  அறிவையும்வீரத்தையும், வளர்க்கிறது !!         நீதிக்கு      போராடுபவர்களாகவும் நேர்மையாய் , வாழுபவர்களாகவும் அவர்களை மாற்றுகிறது  என்று சொல்பவர் அதன் ஆசிரியர்   எஸ் .விஜயன் அவர்கள்



பிரெஞ்ச் மொழியில் வந்த ஆல்பங்கள்



சரி..... இப்பொழுது விஷயத்துக்கு  வருவோம் இந்த வருடம் சென்ற மாதம், நம்முடைய லயன்  காமிக்ஸ் 858  பக்கங்களில்  பிரமாண்டமான ஒரே ஒரு  காமிக்ஸ் கதையை  வெளியிட்டுள்ளனர்  கதையின்  பெயர் "இரத்தப்படலம்" இதன்  விலை  ரூபாய் 200 /=. இந்திய காமிக்ஸ் புத்தக வரலற்றுலேயே!! இவ்வளவு  பெரிய விலையில்  இவ்வளவு பெரியகாமிக்ஸ் புத்தகம்  வெளிவருவது  இதுதான் முதல் தடவை என்று தான்  சொல்லவேண்டும்.




                                 காமிக்ஸ் புத்தகத்தின் அளவு



                                    

பிரெஞ்ச் மொழியில் வந்த ஆல்பங்கள்



மொத்தம் 19 பாகங்களில் வெவேறு தலைப்புகளில் வெளிவந்த இந்த கதையை ஒரே புத்தகமாக வெளியிட்டுருப்பது !உலகிலேயே தமிழ் மொழியில்தான் அந்த வகையில் நாம் காலரை தூக்கிவிட்டுகொள்ளலாம்.  

    
கடற்கரையில் தலையில் துப்பாக்கி காயங்களோடு வீழ்ந்து கிடக்கும் நபரை ஒரு கிழ தம்பதிகள் காப்பாற்று கின்றனர்



                            இரத்த படலம் முன்கதை சுருக்கம்





தான் யார்? என்றே தெரியாது , நினைவாற்றலை இழந்து  இருக்கும் இருக்கும், அவனுக்கு, தெரிந்து   கொள்ள  அவனது  இடது  தோளில் XIII  என்ற  எண் பச்சை குத்தப்பட்டிருப்பது    மட்டுமே?!  தான் யார்? என்று தெரிந்து கொள்ள அவன் முயற்சி  செய்யும்போது தான்  "பல மாபெரும் உண்மைகள் மிக அதிர்ச்சிகரமான   சம்பவங்களாக"   தெரியவருகிறது. !  அமெரிக்க ஜனாதியையே..கொலை  செய்தவன்   என்ற அசைக்க  முடியாத  பழியும்  அவன்மேல்...

எந்த ஒரு பயங்கர நெருக்கடியையும் சமாளிக்கும் ஆச்சரிய  அபார ஆற்றல் அவன் உடலில் .இந்நிலையில் அவனை பலர் கொள்ள துடிப்பதுபோல்  சிலர் அவனை பாதுகாக்கவும் முயல்கின்றனர்




                  ஒரே காமிக்ஸ் பல மொழிகளில்

























காதல்கோபம்,  நட்புஅன்பு, பிரிவுதுரோகம், வேதனை, பழி, அதிரடி ஸாகசம்   என்று பக்கத்துக்கு ப்பக்கம் பரபரப்பூட்டும உணர்ச்சி  மிக்க   போராட்டங்களின்  சிகரத்தை தொட்ட  இந்த காமிக்ஸ் கதையில் ...ஆரம்ப முதல் ... கடைசிவரை ..தொடர்ந்து  வரும்  ஒரு வித  ..இறக்கம் கழந்த     "சோகம்   நமது  மனதை.......நிலைகுலைய   செய்கிறது  அதுவே  உயிரோட்டமுள்ள    இந்தகதையின்  வெற்றிக்கே!!  !காரணமாகும்.

.


                                       ROBERT LUDLUM அவர்கள் எழுதிய கதை






மிக அழகாக,நேர்த்தியாக மிகத்திறமையாக மாபெரும் ஆற்றலோடு பிரபல எழுத்தாளர்  JEAN VAN HAMME அவர்களால்,ROBERT LUDLUM எழுதிய THE BOURNE IDENTITY  கதைக்கு இணையானதாக எழுதப்பட்ட  இந்த கதை பிரபல ஓவிய திலகம் WILLIAM VANCE அவர்களின் மிகத்திறமையான ஓவியத்தின் மூலம் 1984 -ல்தொடங்கி  பிரெஞ்சு மொழியில், வருடத்திற்கு ஒரு புத்தகம் (ஆல்பம்) வீதம் 2007 வரை 23  ஆண்டுகள் வெளியிடப்பட்டது.






சிக்கல் மிகுந்த ஏராளமான கதாபாத்திரங்களை கொண்ட இக்கதையை!மிகதெளிவாகவும் ! சமயோசிதமாகவும்,   துணிச்சலாகவும் நடத்தி சென்றது  கதாசியரின்   இமாலய திறமையேயாகும். 




இடது   WILLIAM VANCEJ   பின்புறம் jEAN VAN HAMME     வலது  JEANGIRAUD    
              

இதில் 1 லிருந்து  19 வரையிலான பாகத்தை வில்லியம் வான்ஸ் வரைந்து இருந்தாலும், பதினெட்டாவது ஆல்பத்தை மட்டும் வேறெரு   பிரபல ஓவியர் JEAN GIRAUD வரைந்துள்ளார். 1984 -ல்,  பிரெஞ்சு  மொழியில் வெளியிடப்பட்ட இக்காமிக்ஸ்,  ஆங்கிலத்தில் 1989 -ல், தான் வெளிவந்தது.  ஆனால் 1986  லேயே தமிழில் திகில் காமிக்ஸில்,  தொடங்கி லயன் காமிக்ஸில் 2010ல், ஆசிரியர்  விஜயன் அவர்களால் முடித்து  வைக்கப்பட்டுள்ளது. 




ஓவியர் JEAN GIRAUD      வரைந்த ஆல்பம்





                             ஆசிரியர் எஸ்.விஜயன் எழுதிய தலையங்கம்







இலங்கையிலருந்து வெளிவந்த  
ஐஸ்பெர்க்  காமிக்ஸ்


இதே காமிக்ஸ் கதை  இலங்கையிலிருந்து ICE BERG COMICS மூலம்  முதல்  இரண்டு  ஆல்பங்கள்   வெளிவிடப்பட்டுள்ளது. உலகிலேயே மொத்த கதையும் ஒரே புத்தகமாக தமிழில்,மட்டும்தான் வந்துள்ளது என்பது மட்டுமல்ல, இந்தியாவிலேயே  தமிழ் மொழியில் மட்டுமே வெளிவந்துள்ளது என்பதும், இரண்டு  வெவ்வேறு  நாடுகளில்,  வெளியிடப்பட்டதும்  தமிழ் மொழியில் தான்  என்பதும் நமக்கெல்லாம்  பெருமை  சேர்க்ககூடியதாகும்.









இலங்கையிலருந்து வெளிவந்த 
 ஐஸ்பெர்க்  காமிக்ஸ்



 முதல் ஆல்பத்தில் டாலர் நோட்டுகளுக்குமுன், இளமையாய் நிற்கும் நமது கதாநாயகர் XIII, கதை முடிந்த பின் வெள்ளை மாளிகையின் முன்னால் இளமை  தகர்ந்த நிலையில் காதோரத்தில்  வெள்ளை  முடி தெரிய நிற்பதும்,    

 இக்கதையை  உருவாக்கி, தொடங்கியபோது   இளமையாய்   இருந்த எழுத்தாளரும்,   ஓவியர்களும்,   இன்று    முதுமயடைந்திருப்பதும,







இலங்கையிலருந்து வெளிவந்த 
 ஐஸ்பெர்க்  காமிக்ஸ்



இதன்  பதிப்புரிமையை தமிழில் வெளியிட ஜெர்மனியில் பிராங்க்பர்ட் நகரில் புத்தக கண்காட்சியில் வைத்து வாங்கியபோது   17  வயது சிறுவனாக  இருந்த  எஸ்.விஜயன் அவர்கள்  இன்று நாற்ப்பது வயதை   கடந்து      காதோரத்தில் வெள்ளை முடி தெரியும் நிலையிலிருப்பதும்,


முதல் ஆல்பத்தை  படிக்கும்போது  வீறுகொண்ட  இளமையாய் இருந்த நாம் அதே வெள்ளைமுடி சமாச்சாரத்தோடு  இருப்பதும், இரத்த படலத்தின்  ஆளுமையேயாகும். 






                                   Adirai Haja Ismail

///////////////////////////


 நன்றி..        ரபீக் ராஜா, கிங் விஸ்வா, டாக்டர் செவன், ஆகியோரின்  வலைத்தலதிளிருந்து சில படங்கள்இங்கே பயன்படுத்தப்பட்டுளன  .அவர்களுக்கும் , ஸ்கேன் காப்பி அனுப்பிய முத்து பேன் அவர்களுக்கும் 

LABEL:-

13 comments:

sabeer.abushahruk said...

Haja,
very good posting.
did u arrange to buy one book for me?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஏனுங்க ! தேன் குடிக்கலாமா ? இல்லே தேனியை காவலுக்கு போட்டிருக்கீங்களான்னு சொல்லிடுங்க... :)

Riyaz Ahamed said...

இவ்வளவு பெரிய காமிக்ஸ் ரத்த படலத்தை தமிழில் தந்திருப்பது தமிழுக்கு பெருமையே மிகவும் அருமை

Thariq Ahamed said...

1/4 நூற்றாண்டு காலம் ஒரு காமிக்ஸ் வெளியானது என்ற பெருமையை பெறுவதுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வருமுன் தமிழில் வந்து தனி சிறப்பும் பெறுகிறது

King Viswa said...

மிகவும் அருமையாக எழுதப்பட்ட பதிவு இது.

ஹாஜா சார், அட்டகாசம்.

கைய கொடுங்க, அப்படியே யாரோ என்னுடைய பக்கத்துல உட்கார்ந்துக்கொண்டு சொல்லுவதைப்போல இருந்தது உங்கள் எழுது நடை.

Rafiq Raja said...

தமிழில் வெளியான மிகப்பிரம்மாண்ட காமிக்ஸ் படைப்பை, மழலை மொழியில் நெகிழ்ந்து பகிர்ந்திருக்கிறீர்கள் ஹாஜா. ப்ளாக்கின் லேஅவுட் பதிவை முழுவதும படிக்க முடியாமல் செய்கிறது.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

நண்பரே!

....முதல் ஆல்பத்தை படிக்கும்போது வீறுகொண்ட இளமையாய் இருந்த நாம் அதே வெள்ளைமுடி சமாச்சாரத்தோடு இருப்பதும், இரத்த படலத்தின் ஆளுமையேயாகும். //

XIII ன் நீண்ட கால வரலாற்றை இதைவிட அருமையாக சொல்ல முடியாது!

தேன்துளி Then Thuli said...

நன்றி! நன்றி எங்கள் வலைத்தளத்தில் விஜயம் செய்து,
ஹாஜா இஸ்மாயில் அவர்களின் "பதிவை" படித்து
தங்களின் கருத்துக்களை பதிவு செய்த King Viswa , Rafiq Raja ,அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு எமது ஆசிரியர் குழு சார்பாக மனமார்ந்த நன்றியை தெருவித்து கொள்கிறோம்

Vedha said...

excellent post. Haja rocks.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

மிகவும் அருமையான பதிவினை அளித்த ஹாஜா இஸ்மாயில் அவர்களுக்கும், அதனை பதிப்பித்த தேன்துளி குழுவினருக்கும், அந்த நல்ல தகவலை எல்லோருக்கும் அளித்த விஸ்வா அவர்களுக்கும் நன்றிகள். ஹாஜா அவர்கள் தொடர்ந்து காமிக்ஸ் பற்றி எழுத வேண்டுகிறேன்.

Ravindhar said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தேன்துளி Then Thuli said...

மீண்டும் எங்களின் வலைத்தளத்திற்கு விஜயம் செய்து, தங்களின் கருத்துகளை பதிவு செய்த திருவாளர்கள் Vedha,Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்,Ravindhar,ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்

தேன்துளி ஆசிரியர் குழு

crown said...

Please read கவிகன்னல் சபீரின் காதல் கிரீடம்.
visit www.crownthasthageer.blogspot.com

Post a Comment

உமர் தமிழ்