Monday, December 27, 2010

நட்பு! ..............

தேன்துளி Then Thuli 11:30 PM

                  நட்பு!
  சபீர்


நட்பு!
நல்லதோர்
மனிதம் செய்ய..
அது
நலம் பெற...

நண்பனின் கைகளில்
கொடுத்துவிடு!

நட்பு...
தாய்மையின் அன்பைப்போல்
தூய்மையானது!

தந்தையின் பரிவைப்போல்
விந்தையானது!

அண்ணனின் ஆதரவைப்போல்
உண்ணதமானது!

தம்பிக்கை கொடுப்பதுபோல்
நம்பிக்கையானது!

அக்காளின் வருடல்போல்
எக்காலமும் மிருதுவானது!

தங்கையின் குறும்பைபோல்
எங்கேயும் விரும்புவது!

நட்பு...
சொந்தங்களை வென்ற
சுகமான சந்தம்,


நட்பு...
எதையும் எதிர்பார்க்காத
இதயம் கொண்டது,

விற்க வாங்க முடியாத
விலை மதிப்பற்றது!




வள்ளுவரே...

உடுக்கை இழக்கும்வரை
உதவப் பொறுப்பதில்லை.
இடுப்பில் இருக்கும்போதே
இழக்காமல்

இருக்கிப் பிடித்து
இடுக்கன் களையும்

எம் நட்பு!







                                                                    
-sabeer





                                                                

LABEL:-

0 comments:

Post a Comment

உமர் தமிழ்