Tuesday, December 28, 2010

வித்தியாசமானவர்கள்-

தேன்துளி Then Thuli 12:04 AM


வித்தியாசமானவர்கள்- பகுதி 2

ஜாகிர் ஹுசைன்


சிலர் எவ்வளவு தூரம் போனாலும் சாப்பிடாமல் வீடு வரும் ரொம்போ நல்லவேன்....... இவர்கள் தஞ்சாவூருக்கு போனால் கூட ஒரு சர்பத் வாங்கி கேட்க்கும் பெண்களுக்கு 'அதெல்லாம் வேணாம்.. ஊருக்குபோயி குடிக்சுக்களாம்" என பொடோ சட்டத்தில் பிடிக்கப்போர மாதிரி பெண்களை பயம்காட்டி வைத்திருப்பார்கள். இல்லாவிட்டால்... "பஸ் வந்துடுச்சி" என்று ஏதோ வாழ்க்கையின் கடைசி பஸ் வந்தமாதிரி அரட்டிஎடுப்பார்கள்.


இது பெரும்பாலும் நடக்கும் விசயம் , பசித்தாலும் சாப்பிடாமல் ஃபிளைட் டுக்கு போக பெட்டி , பேக் எல்லாவற்றையும் தூக்கிகொண்டு போவார்கள். '[ஃபிளைட்டுக்குள் சாப்பாடு தருவாங்கப்பா” என்ற தத்துவம்வேறு] விமானம் புறப்படுமுன் நடத்தும் பாடம் எல்லாம் முடிந்து , ஏதோ பிரசவத்துக்கு மனைவியை O.T க்கு அனுப்பிய கணவன் மாதிரி அங்கும் இங்கும் நடந்து க்ரூ சாப்பாடு தட்டை நமக்கு வைக்குமுன் , சாப்பாடு மறந்து , பசி போயிருக்கும். இந்த பதைபதைப்பில் சுகர்லெவெல் குறைந்து மூலை ஹ்ய்பர்னேசன்.... [ஏறக்குறைய கம்ப்யூட்டரின் சேஃப் மோடு மாதிரி வேலை செய்யும்போது சின்ன வயதில் பழகியவர்கள் எல்லாம் இன்னும் பொல்யூட்டட் ஆகாமல் நம்மிடம் நல்லபடியாக பழகிய மாதிரி ஒரு "பொய்படம்" காண்பிக்கும்...இதை நம்பி ஊருக்குபோய் 'எப்டிப்பா இருக்கே' என அன்புடன் கேட்டால் அவன் ஏதொ வெளிநாட்டு டூரிஸ்ட்டிடம் சென்னை டாக்ஸிக்காரன் பேசுகிறமாதிரி பேசும்போது 'ஜக்கி" யாகி மண்டையை குடைவோம்...தேவை என்ன தெரியுமா..கோளாறு அவனிடம் இல்லை, உங்கள் பேன்க்ரியாஸிசில் இருக்கிறது.
சில டென்சன் பார்ட்டிகளின் அளப்பறை எந்த விதமான மெட்ரிக் அளவிலும் அளக்கமுடியாது. இந்த சமயத்தில் இதை நான் செய்தே ஆக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.இது ஏதோ லைசன்ஸ் புதிப்பிக்க தவறினால் அரசாங்கம் அபராதம் விதிக்கும் எனபது மாதிரி இரவில் பால் பழம் சாப்பிடாமல் என்னால் படுக்கமுடியாது என மற்றவர்களின் நிம்மதியை இன்ஸ்டால்மென்ட்டில் கெடுத்துக்கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி சமயங்களில் எப்படி பட்ட புத்தராக இருந்தாலும் தெலுங்கு பட வில்லனை விட மோசமாக கோபம் வரும். இவர்களின் வாழ்க்கையில் பார்ததெதெல்லாம் "தன்/என்" இரண்டு விசயங்கள்தான். கால ஒட்டத்தில் இளையசமுதாயம் வளர்ந்து வரும்போது இவர்களை கரி அயன்பாக்ஸ் மாதிரி ஒதுக்கி வைத்திவிடுவார்கள்.
இன்னும் சிலர் கல்யாண விடுகளில் பெண்கள் இருக்கும் இடத்தில் தான் இருப்பதை தெரியப்படுத்த ஹீரோ வேசம் எல்லாம் போடுபவர்கள் [ அன்றைக்கு மட்டும் இவனுகளுக்கு தொண்டை கட்டாமல் தெளிவாக அதிக டெசிபலில் கத்துவார்கள்] 'ஏன்னா அவருக்கு எல்லாம் தெர்யும்ல'. அந்த சமயத்தில் யாரவது இவர்களை திருமண விருந்துக்கு காய்கறி, நெய் டின் எல்லாம் வைத்திருக்கும் சின்ன ரூமுக்கு அழைத்துப்போய் இனிமே இப்படி கத்தி பேசாதெ என நொங்கினால் அது தேசியசேவையாக கருதப்படும்.
இதில் சப் டிவிஷனாக சில பேர் இருக்கிறார்கள். இதை நான் கல்லூரியில் படிக்கும்போது இவர்களிடம் பார்த்திருக்கிறேன். துபாயில் பார்ப்பது சாதாரண வேலையாக இருக்கும் ஏதோ துபாய் அரசர் வெளியூர் போகும்போது இவரிடம் சொல்லி "துபாயை நல்லாபாத்துக்க' என ஏதோ மாடியில் வடாம் காயப்போட்டதை காக்கை சாப்பிடாமல் பார்த்துகொள்ள சொன்ன மாதிரி நம் ஊர் பெண்களிடம் பில்ட் அப் கொடுப்பார்கள். இனிமேல் தான் கிளைமாக்ஸ் இருக்கிறது. சென்னையில் இவர்களை கூட்டிக்கொண்டு பாஸ்போர்ட் ஆபிஸ், ஏர்லைன் டிக்கட்டிங் போகும் போது இவர்கள் பம்முவது யாருக்கும் அடுக்காது. இங்லீஸில் ஏதாவது எதிரில் உள்ள ஏர்லைன் ஊழியை கேட்டால் ஏதோ அவள் ஈட்டியை எடுத்து வந்து குத்தப்போவது போல் பயப்படுவார்கள். அப்போது மட்டும் பிப்ரவரி 31 ந்தேதி OK போடட்டுமா என்றால். என்று No Proble சொல்லிவிடுவார்கள். வெளியில் வந்து ஆட்டோ எடுத்ததிலிருந்துm உட்லேண்ட்ஸிலோ ஊடுப்பியிலோ சாப்பிடும் வரை தான் துபாயில் அரசருக்கு அடுத்த ஆள் என்ற மறு ஒலிபரப்பு தொடரும்.

இதை படிக்கும் போதுசிலருக்கு அசரீரியாக ' "உன்னைத்தானே...ஹேய்...உன்னைத்தானே ஹேய்..' என்ற பாட்டு காதுக்குள் ஒலித்தால் அதிரை நிருபரிடம் Defamation writ போட்டுக்கொள்ள கடவது.
- ZAKIR HUSSAIN

LABEL:-

1 comments:

sabeer.abushahruk said...

எத்தனை முறை வாசித்தாலும் ரசிக்கவைப்பது உன் எழுத்தின் ஸ்பெஷாலிட்டி.

Post a Comment

உமர் தமிழ்