Thursday, December 30, 2010

அளவற்ற அருளாளன்

தேன்துளி Then Thuli 11:52 PM




அளவற்ற அருளாளன்  

ரியாஸ் அகமது

                         
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் பெயரால்...


இறைநம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்  (23:1)


இந்த வசனத்தை பார்த்தால் பலர் ஆச்சரியப் படுவார்கள் காரணம் இறைநம்பிக்கையாளர்களுக்கும் வெற்றிக்கும் வெகுதூரம் என்பது ஊர் அறிந்த உண்மை அப்படின்னா? இந்த வசனத்தின் நிலை இதை தொடர்ந்து வரும் வசனம் தெளிவு படுத்துகிறது இறைநம்பிக்கையாளர்களின் இலக்கணம் பற்றி.

1. தமது தொழகையில் பணிவைப் பேணுவார்கள் (23:2)

முஸ்லிம்கள் மீது சுமத்தப் பட்டள்ள கடமைகளில் மிக முக்கியமானது தொழகை.
என்னை எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் - மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) புகாரி.
தொழகையில் நம்முடைய அல்லாஹ்வின் முன் ஒவ்வொரு நிற்கின்றோம் என்ற நினைவில் நபி (ஸல்) அவர்கள கற்று தந்தபடி பணிவுடன் தொழ வேண்டும்.

2. வீணானதைப் புறக்கணிப்பார்கள்  (23:3)

வீணானவை எவை என்றால் யாருக்கும் எந்த வித பயனுமில்லாதவை இதில் முக்கியமானது பேச்சு.வீணான பேச்சு பேசலெனா அவனுக்கு தூக்கமே வராதுன்னு சொல்பவன் கூட ஒன்னா சேர்ந்து வீணான பேச்சு பேசுவான் ஏன்னா அது தான்
அவனுக்கும் அல்வா சாப்பிட்ட மதிரி. தெரு கதை ஊர் கதை உலக கதை என வானளவு பேசுவான் எல்லாம் தனக்கு தெரியும் என்பது போலெ அவனுக்கு ஒன்னும் சரியா தெரியாது என்பது வேறு விசயம்.இது போன்றவற்றை தவிற்பது வெற்றிக்கு வழி

3. ஸகாதையும் நிறைவேற்றுவார்கள்  (23:4)

ஸகாதை பலர் பிச்சையிடுவது போல் நினைத்து காலங்காலமாக கொடுக்கிறார்கள்.
ஸகாத் கொடுக்க வசதியுடையோர் அவர்களின் செல்வ அளவின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சொல்லி தந்த முறைபடி ஸகாதை பெற தகுதியுடையோருக்கு
குறைவின்றி கொடுக்கனும்

4. வெட்க தலங்களை (கற்பை) பாதுகாக்கிறார்கள் (23:5.6)

ஒரு ஆண் ஒரு பெண் தனித்திருக்கும் போது ஷைத்தானும் கூட இருக்கிறான்
என்பதை மறந்து தான் ஆண்மகன் என்பதை நிலை நாட்டவே ஆசை படுகிறான்.
தனது நிழலை தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழில்      ஏழு    பிரிவினர்களுக்கு  மட்டும் நிழல் கொடுப்பான் அதில் ஒரு பிரிவினர் அழகும் அந்தஸ்தும் நிறைந்த ஒரு பெண் தன்னை தவறுக்கு அழைக்கும் போது நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன் என தவறு செய்ய மறுத்தவன் - ஷக்காத் பின் அவஸ்(ரலி) புகாரி.

ஒரு ஆண் ஒரு பெண் தனித்திருக்கும் போது ஷைத்தானும் கூட இருக்கிறான் என்பதை   மறந்து தான் ஆண்மகன் என்பதை நிலை நாட்டவே ஆசை படுகிறான்.மனிதனின்   ஆசைக்கு எதிலும் அளவென்பதே இல்லை மண்ணறையை காணும் வரை.மனைவி அடிமைப் பெண் தவிர வேறு வழிகளை தேடுபவர்கள் வரம்பு மீறிய வழி கெட்டவர்களே

5. தமது அமானிதங்களையும் உடன்படிக்கையையும் பேணுவார்கள்  (23:8)

பிறர் நம்மிடம் ஒரு பொருளை தந்து பிறகு வாங்கி கொள்கிறேன் என்றால்   நாம் அதை திருப்பி கொடுக்கும் போது குறைவின்றி கொடுக்கனும்.    வைத்திருந்ததற்காக வாடகை வசூலிக்க கூடாது. இருவர் அல்லது பலர் சேர்ந்து ஒர் உடன்படிக்கை செய்தால் உடன்படிக்கையின் காலம் முடியும் வரை அதை பேணி காக்கனும்.

6. அவர்கள் தமது தொழுகைகளை பேணி கொள்வார்கள்  (23:9)

 இறைநம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும் பிறகு தொழலாம் பிறகு தொழலாம் ஏன தொழுகையை விட்டு விடுகிறார்கள். தொழுகைக்கு ஆரம்ப நேரம் இறுதி நேரம் எது என சொன்ன நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப நேரத்தில் தொழுவதை அல்லாஹ்மிக விரும்புவதாக சொன்னார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு அல்லாஹ் தரும் மிக பெரிய பரிசு பிர்தவ்ஸ் எனும் சொர்க்கம்

Riyaz Ahamad

LABEL:-

2 comments:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
நல்ல ஹதீஸ்கள்
எழுத்துப்பிழைகளை கொஞ்சம் சரி செய்து பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

sabeer.abushahruk said...

//இந்த வசனத்தை பார்த்தால் பலர் ஆச்சரியப் படுவார்கள் காரணம் இறைநம்பிக்கையாளர்களுக்கும் வெற்றிக்கும் வெகுதூரம் என்பது ஊர் அறிந்த உண்மை//

உன் புரிதலில் பிழை இருக்கிறது. இறை நம்பிக்கையாளர்கள்தான் வெற்றிபெற்றவர்கள். இதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. வெற்றி தூரமாக சிலருக்குத் தெரிந்தாலும், வெற்றி உறுதி என்பது என் கருத்து.

Post a Comment

உமர் தமிழ்