Friday, February 18, 2011

மடிந்துபோன மனித நேயம்:: கவிதை

தேன்துளி Then Thuli 8:39 PM

மடிந்துபோன மனித நேயம்:




மனித நேயம் மடிஞ்சி போச்சு
பகல் வேஷம் மலிஞ்சி போச்சு
சுயநலம் எனும் கூட்டுக்குள்ளே
சுருங்கிப் போச்சு மனித நேயம்!   

          
காயம்பட்ட காகம் கண்டு
கரையும் காக்கைக் கூட்டம்
காயம் கண்டு கரையும் அந்த
நேயம் எங்கே மனிதா?

ஒட்டுமொத்த கூட்டமும்
கட்டுக்கோப்பா வழ்ந்தோம்
காயம் பட்டு மனதிலே -மனித
நேயம் விட்டுப் போச்சு!

நாகரிகப் போர்வைக்குள்ளே
தனிமைப்பட்டான் மனிதன்
நாயைவிட கேவலமாய்
நன்றி கொன்றான் மனிதன்!


காசுபணம் கணக்குப் போட்டு
பாசம் நேசம் விற்றான்
அக்கம்பக்க வீட்டாரோடு
பரிச்சயத்தை வெறுத்தான்


மனித நேய மகாசக்தி
மடிந்து போன காரனம்
எல்லைச் சண்டை நாட்டிலே
கொல்லைச் சண்டை வீட்டிலே!       

                   
ரெண்டடி நிலத்திற்காக
தடியடி வரைப் போகிறாய்
ஆறடியில் அடங்கும்போது
காலடி கூடக் கிடைக்காது!


நாடி அடங்கிப் போகயிலே
நாலு பேரு வேனும் -அந்த
நாலு பேரு வேனுமெனில் - மனித
நேயம் வளர்க்க வேனும்!


Sabeer abuShahruk,
-

5 comments:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

மனித நேயம் என்பது பிளாஸ்டிக் பை போன்று மடியாது இருக்கவேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இருப்பதைக் கொடுத்திட / காட்டிட இறுகியது மனம்

இல்லாததை கொடுத்திட / காட்டிட துடிக்கிறது அதே மனம் !

கவிக் காக்காவின் வரிகள் என்றும் இப்படித்தான் சொல்லும்...

//நாலு பேரு வேனுமெனில் - மனித
நேயம் வளர்க்க வேனும்!//

Riyaz Ahamed said...

சலாம்
நாடி அடங்கிப் போகயிலே
நாலு பேரு வேனும் -அந்த
நாலு பேரு வேனுமெனில் - மனித
நேயம் வளர்க்க வேனும்!
மனித நேயமும் வியபார பொருளா பார்கிற காலமா இருதாலும், மேலுல்ல உயிரோட்ட வரிகள் மனித
நேயம் வளர்க்கும் இன்ஷா அல்லாஹ்

Muhammedh idhrees said...

நாடி அடங்கிப் போகயிலே
நாலு பேரு வேனும் -அந்த
நாலு பேரு வேனுமெனில் - மனித
நேயம் வளர்க்க வேனும்!
மனித நேயமும் வியபார பொருளா பார்கிற காலமா இருதாலும், மேலுல்ல உயிரோட்ட வரிகள் மனித
நேயம் வளர்க்கும் ..அருமையான வரிகள்

Unknown said...

Super

Post a Comment

உமர் தமிழ்