Thursday, June 16, 2011

கனா கண்டேன் தோழா!

தேன்துளி Then Thuli 7:47 AM

 கனா கண்டேன் தோழா!-        சபீர்












வளி மண்டலத்தின்
மொத்தப்
பிராண வாயுவும்
உறிஞ்சப் பட்டுவிட
எஞ்சிய
வெற்றிடத்தால்
மூச்சுத் திணறியது!    


                                    

                                                                           
எண்பதுகளில்
திரையில் கண்ட
அசுர வடிவ
சுறா வொன்று
தன்
தாடைகள் அகட்டி
தலை கவ்வி
கழுத்தைக் கடிக்க
மூச்சுத் திணறல்
முற்றியது!


                                                                                    
வேற்று கிரக
பறக்கும் தட்டிலிருந்து
இறங்கி வந்த
ராட்சதனின்
நாக்கு நீண்டு
தொண்டையத் துளைக்க
மூச்சுத் திணறல்
தீவிரமடைந்தது!




அமேஸான் காடுகளின்
அனகொன்டா வொன்று
கழுத்தைக் கவ்வி
அருவியில் ஏற
மூச்சு
முடங்கத்
துவங்கியது!





கருப்பு வெள்ளைக்
காலத்து
கடுமுக வில்லன்
தன்
கைகள் கொண்டு
என்
கழுத்தை நெறிக்க
உயிர் போவதை
உணர முடிந்தது!
                                                                         


ஆயினும்
எஞ்சிய
சொற்ப பலம் கொண்டு
கழுத்தை அழுத்திய
வில்லன் கைகளை
பிய்த்து எறிந்தேன்...


என்
கழுத்தின் மீது கிடந்த
தன்
கால்
உதறி யெறியப்படுவதை
உணராத
உறக்கத்திலிருந்த
என் மகன்
தன் தூக்கம் கலைந்து
மருண்டு விழிக்க...
வியர்வை துடைத்தெடுத்து
சுவாசம் சீரானதும்
மகனைக் கட்டிக்கொண்டு
மீண்டும் உறங்கலானேன்...





இந்தச்
சலனங்கள்
ஓய்ந்ததும்
இரா
தன் இருட்டை
மீண்டும்
கெட்டியாக்கி கொண்டது!


Sabeer abuShahruk,






LABEL:-

1 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கனவும் இட்ட வண்ணப் படங்களும் ஏங்க வைக்கிறது இவர்கள் இன்னும் பக்கத்திலிருந்திருக்கலாமே என்று (எடிட்டரைச் சொன்னேன் - ரைட்டர் எங்கப் பக்கத்தில்தான் இருக்காங்கோ)

கணவுகளின் சலனம் அருமை !

வரிக்கு வரி எழுத நான் கிரவுன் அல்ல இருப்பினும் அவன் கூப்பிடுவது என்னை N.காக்கா என்றே !

Post a Comment

உமர் தமிழ்