Thursday, May 26, 2011

வித்தியாசமானவர்கள்.-பகுதி 3

ZAKIR HUSSAIN 2:50 PM

வித்தியாசமானவர்கள்.-பகுதி 3



எப்போதோ நடந்த விசயஙக்களுக்கு இன்றைய வரை மனதில் வைத்துக்கொண்டு தானும் முன்னேராமல் மற்றவனையும் முன்னேராமல் தடுக்கும் "பிரேக் இன்ஸ்பெக்டர்" கள் நிறைந்த உலகம் இது. இதில் காமெடி என்னவென்றால் ஒரு அட்சரம் கூட பிசகாமல் தான் இப்படி ஆகிவிட்டதற்க்கு தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்று கல்வெட்டு மாதிரி சொல்வார்கள்.

சில வருடங்களுக்கு முன் [ இங்கேயும் ஃபிளாஸ்பேக் எல்லாம் எழுதுவோம்ல'] எனக்கு தெரிந்த ஒருவர் தான் முன்னேராமல் போனதற்க்கு காரணம் , 'கப்பலுக்கு போகும் போது குறுக்க பண்ணி கிராஸ் ஆயிடுச்சி'...அதுதான் காரணம் என்றார். இதை சொன்னவர் அதிராம்பட்டினத்து காக்கா. அதை ஆர்வத்துடன் கேட்டது முத்துப்பேட்டை நானா. இந்த முத்துப்பேட்டைக்காரர் திடீரென்று மண்டையில் பல்ப் எரிய..எப்படி காக்கா தண்ணிக்கப்பலுக்கு குறுக்கே பண்ணி கிராஸ் பன்னமுடியும்..லாஜிக் உதைக்குதே என இஸ்ரோ விஞ்ஞானி ரேஞ்சுக்கு கேட்டார். உடனே அதிரை ஆள்..'சொல்ரதை சரியா கேளுங்க... நான் நடக்கும்போது கிராஸ் ஆனதுன்னு சொன்னேன்...கப்பல் போகும்போது நடுக்கடலில் கிராஸ் ஆனுச்சினா சொன்னேன்" என்றார். இந்த விசயம் நடந்தது இந்தியா சுதந்திரம் அடைய முன்னாடி.தெரியுமா என்றார்.

உடனே இந்த முத்துப்பேட்டைக்காரர் சொன்னது'..." இருந்தாலும் காக்கா இத்தனை வருசத்திலெ அந்த பண்னி செத்திருக்குமே காக்கா..இன்னுமா நீங்க முன்னேர அந்த பண்ணி தடையா இருக்கு?' என்று ஒரு குரோர்பதி கேள்வி கேட்டாரே....

வாழ்க்கையில் பணம் அதிகம் சம்பாதிக்க சிலர் எடுத்திருக்கும் ஒப்பற்ற முயற்ச்சிகளை பார்த்தீர்களானால்Millionair Mindset நடத்தும் வெள்ளைக்காரன் கூட தலையில் துண்டுபோட ஆரம்பித்துவிடுவான்.[ அவைங்களும் சரியா சொல்ரானுகளானு அவனுகளுக்கெ வெளிச்சம் ]

# ஒப்பற்ற முயற்ச்சிகளை பார்ப்போம்.

· ராசியான மணிபர்ஸ் என்று நாய் விழுந்து குதறியமாதிரி ஒரு பர்ஸ் வைத்திருப்பார்கள்.

· தலைமாட்டுக்கு மேல் உள்ள சில படங்களுக்கு பத்தி காண்பிப்பார்கள்.

[ பில்கேட்ஸ் , அம்பானி ஆபிசில் குத்துமதிப்பா ஒரு 200 படமாவது இருக்கனுமே காக்கா]

· கல்லா பெட்டியில் மவுலூது ஒதிய கேசட்டை வைத்திருந்த ஒருவர் சொன்னது...'பணம் வரும்'

· கையில் வைத்திருக்கும் சில நூல் சமாச்சாரங்கள் கஸ்டமரை கொண்டுவந்து சேர்க்கும் என்று ஒரு ஆள் அமெரிக்காவின் சிட்டி பேங்க் குரூப்பில் கிரடிட்கார்ட் பகுதியின் ஜெனரல் மேனேஜரையே நம்பவைத்து ஜல்லியடித்ததை பார்த்து அசந்து விட்டேன்.

· பிரிதொருவர்...தான் போட்டிருந்த பெல்ட் ரொம்ப அறுதபழசாகிப்போனதை சொல்லிக்காட்டியவரை ராஜபக்சேயை பார்ப்பது போல் பார்த்தார். சிலருக்கு வருமானம் அதிகம் இருந்தாலும் தனக்கு செலவுப் செய்து கொள்வதை அது அத்யாவசியமாக இருந்தாலும் வேஸ்ட் என நினைப்பார்கள்.

· முன்பு பழக்கப்பட்ட ஒருவர் ...அவரின் வருமானத்தில் ஒரு நாளைக்கு ஒரு லேப்டாப் வாங்கலாம், கணக்கில் திறமையான ஆள். இருந்தாலும் அவரின் பாக்கெட்டில் இருக்கும் சின்ன சின்ன பேப்பர்களுடன் கொஞ்சம் பணம் , பார்க்கிங் சீட். இன்னபிற பேப்பர் சமாச்சாரங்களை எப்படி மெயின்டைன் செய்கிறார் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி.

· இங்கு ஒருவர் [உறவினர்] இருந்தார், 10 நிமிடம் அவரிடம் பேசினால் குறைந்தது 20 பிசினஸ் அவரால் செய்ய முடியும் என்பதுபோல் பேச்சு இருக்கும். நானும் ஒரு மரியாதைக்கு அவர் பேசுவதையெல்லாம் அக்கரையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் போன பிறகு அவரது நண்பர் என்னிடம் சொன்னது

' என்ன சொல்றாப்லெ...ரொம்ப அள்ளிவிடுவானே???'

'ச்சே அப்படியெல்லாம் இல்லெ"

' எனக்கு தெரியும்..இவன்லாம் விட்டா ரால் வித்தே ராக்கெட் வாங்கிடலாம் நு சொல்வான் ... தமிழில் புதுக்கவிதை , மரபுக்கவிதை மாதிரி 'வெடப்பு கவிதை' நு ஒன்னு இருக்கும்னு அப்பதான் தெரிஞ்சது.

காருக்குள் உட்கார்ந்து “ YOU CAN DO IT.. I CAN DO IT” என ஒருவர் கத்திகொண்டிருந்தார்...இன்னொரு ஏஜன்சியில் இருந்தவராகையால் செமினார் சமயங்களில் பார்க்கும் வாய்ப்பு அதிகம். ஆனாலும் கத்திய இடம் ஒரு டிராபிக் லைட் அருகில். எதற்க்கு கத்தினீர்கள் அன்று என கேட்டபோது ..அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேர முடியும் என்றார். அவ்வளவும் POWERFUL POSITIVE AFFIRMATION தெரியுமா என்றார்.

பலகீனமான எண்ண ஓட்டம் உள்ளவர்கள் அதை மறைக்க கத்துவார்கள் என்பது "ஜென் [ZEN]' தத்துவம்.

ZAKIR HUSSAIN

0 comments:

Post a Comment

உமர் தமிழ்