என் சாய்வு நாற்காலியிலிருந்து...!
(சிற்சில வாழ்வியல் உணர்வுகளின் தொகுப்புத் தொடர்..2)
Sabeer Ahmad
கதவைத் தட்டியதில்
விழுப்பு தட்டியது
பிள்ளைப் பிராயத்து
நினைவுகளை
தட்டி எழுப்பியது
(சிற்சில வாழ்வியல் உணர்வுகளின் தொகுப்புத் தொடர்..2)
Sabeer Ahmad
கதவைத் தட்டியதில்
விழுப்பு தட்டியது
பிள்ளைப் பிராயத்து
நினைவுகளை
தட்டி எழுப்பியது
முருகய்யா தியேட்டர்...
முடிச்சு முடிச்சாய் முருக்கு...
மதிய நேரக் காட்சி-
மகளிர் பக்கக் கதவு
மறுபடி திறக்க…
வெள்ளித் திறையில் விழுந்த
வெளிச்ச வெட்டு…?
முடிச்சு முடிச்சாய் முருக்கு...
மதிய நேரக் காட்சி-
மகளிர் பக்கக் கதவு
மறுபடி திறக்க…
வெள்ளித் திறையில் விழுந்த
வெளிச்ச வெட்டு…?
தெருவில் ஓதித் திறிந்த
அர்ரஹ்மானும்...ஆமீனல்லாவும்...
தராவீஹும்…ஹிசுபும்
கொடிமர மைதான
கிளித்தட்டும்...
கஞ்சியில் பிய்த்துப் போட்ட
இறால் வாடாவும்...?!
அர்ரஹ்மானும்...ஆமீனல்லாவும்...
தராவீஹும்…ஹிசுபும்
கொடிமர மைதான
கிளித்தட்டும்...
கஞ்சியில் பிய்த்துப் போட்ட
இறால் வாடாவும்...?!
உம்மா வைத்து விட்ட-
சுர்மா,
பெருநாள் கைலியில்
லேபில் கிழிக்கும் சந்தோக்ஷ்ம்,
கைலியில் தங்கிய
லேபிலின் எச்சம்…?
சுர்மா,
பெருநாள் கைலியில்
லேபில் கிழிக்கும் சந்தோக்ஷ்ம்,
கைலியில் தங்கிய
லேபிலின் எச்சம்…?
தான்தோன்றிக் குளத்தில்
அம்மணக் குளியல்,
உடையைத் திரும்பப் பெற…
பெருசுகள் முன்னால் போட்ட
தோப்புக் கரணங்கள்…?
அம்மணக் குளியல்,
உடையைத் திரும்பப் பெற…
பெருசுகள் முன்னால் போட்ட
தோப்புக் கரணங்கள்…?
அடாத மழையும்
விடாத விளையாட்டும்,
சாயந்தர விளையாட்டுக்குப் பிறகு
கடை ஆணத்தில்
ஊறிய பரோட்டா?!
விடாத விளையாட்டும்,
சாயந்தர விளையாட்டுக்குப் பிறகு
கடை ஆணத்தில்
ஊறிய பரோட்டா?!
குரங்கு பெடலில் சைக்கிள்,
செடியன் குளத்தில்
பச்சை-
பச்சைத் தண்ணீர் குளியல்,
லக்க்ஷ் சோப்பில்
பினாங்கு வாசம்?
செடியன் குளத்தில்
பச்சை-
பச்சைத் தண்ணீர் குளியல்,
லக்க்ஷ் சோப்பில்
பினாங்கு வாசம்?
ரயிலடிக் காற்றில்
பரீட்சை பயத்தில் படிப்பு?
கூடு பார்த்த
அடுத்தநாள் தூக்கம்?
ஈ மொய்த்த பதனி?
கலரி வேலை-
கலைப்புக்குப் பிறகு…
எறச்சானம்/புளியானம்?
பரீட்சை பயத்தில் படிப்பு?
கூடு பார்த்த
அடுத்தநாள் தூக்கம்?
ஈ மொய்த்த பதனி?
கலரி வேலை-
கலைப்புக்குப் பிறகு…
எறச்சானம்/புளியானம்?
வீடு திரும்பும் நள்ளிரவில்
எங்கிருந்தோ…
கிழங்கு சுடும் வாசம்?
பாம்பு முட்டையிடுதாம்!
பாதி நிலவொளியில்…
பின்னால் பேய்?
ஏழு கட்டையில்…
"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
ஓடு ராஜா..."?
எங்கிருந்தோ…
கிழங்கு சுடும் வாசம்?
பாம்பு முட்டையிடுதாம்!
பாதி நிலவொளியில்…
பின்னால் பேய்?
ஏழு கட்டையில்…
"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
ஓடு ராஜா..."?
...தொடரும்!
சபீர் அஹமது
LABEL:-
1 comments:
அஸ்ஸலாமு அலைக்கும். பாலகனாய் பின் சிறுவனாகிப்பின் இளைஞனாய் மாறி இன்னும் இளமையில் வாழும் சற்றே முதுமை அடைந்தபோதும் விடாது மழையாய் இன்னும் நனைந்துகொண்டும், எம்மையும் நனையவிட்ட அந்த குறுகுறுப்பு அப்படியே கட்டிபோட்டுவிடுகிறது. எம்மையும் பழங்காலத்தை அசைபோட வைக்கிறது. நல்லதொரு எழுத்து (ப)பாணி!.
Post a Comment