இதன் பெயர் ஏதோ பழைய தெலுங்கு டப்பிங் படத்து பெயர் மாதிரி இருந்தாலும் இதன் மதிப்பு இப்போது உலக அளவில் பேசப்படுகிறது. ஒரு கிலோ இப்போது USD 10,000/= வரை விலை போவதாக பி பி சி வெப்சைட் செப்புகிறது.
இது உருவாகும் விதம் தான் கொஞ்சம் லாஜிக் உதைக்கிறமாதிரி இருக்கிறது.
விளையும் இடம் நேப்பாளத்தின் மிக உயர்ந்த மலைகளின் ப்ளேட்டூக்களில். அங்கு போய் யார்ஷகும்பாவை அறுவடை செய்வதை விட மலையின் அமைதியில் மனம் லயித்துவிடும். தேவைப்பட்டால் எக்கோ வருகிறமாதிரி பாட்டு பாடலாம்.
இதன் மருத்துவ குணங்களுக்குதான் இவ்வளவு மதிப்பு. இது சுவாசம், [Respiratory]ரத்த ஒட்டம் சம்பந்த பட்ட[ Hemotological] விசயங்களிலிருந்து ___________________போட்டு எழுதும் விசயங்கள் வரை கை கண்ட மருந்து.
[ கை எப்படி காணும்?]
இதை அறுவடை செய்ய நேப்பாளத்து மக்கள் செய்யும் வீர சாகசங்களை பார்த்தால் ரத்தம் உறையும். ஏறக்குறைய 5000 அடி மலைப்பிரதேசத்துக்கு கால் நடையாகவே சில தினங்களுக்கான உணவு எல்லாவற்றையும் எடுத்து [தலையில் கட்டிக்கொண்டு போகிறார்கள்] நமது பசங்களை இந்த வேலைக்கு அனுப்பினால் நிச்சயம் புறப்படுவதற்க்கு முதல் நாள் பாஸ்போர்ட்டை ஒழித்து வைத்து விட்டு "காணாப்போயிடுச்சே" என சூடம் அணைத்து சத்தியம் செய்வார்கள். அமெரிக்கர்கள் இதை பெரிய அளவில் ஆராய்ச்சி செய்து சொந்தமாக ஒரு சுழலை உறுவாக்கி விளைச்சலை ஆரம்பித்து விட்டார்கள். எலிக்கு கட்டியை உறுவாக்கி பிறகு இந்த மருந்தை செலுத்தி கட்டி கரைவதின் மூலம் கேன்சர் சம்பந்தமான மருந்து கண்டுபிடிக்க ஒரு Break through கண்டுவிட்டதாக இயம்புகிறார்கள். கூடிய சீக்கிரம் வேப்பை மரத்துக்கு உரிமை கொண்டாடியததை இதிலும் செய்யலாம். நேப்பாள் காரன் கத்தி எடுத்தால் ரத்தம் காட்டாமல் வைக்க மாட்டான் என்று ஒரு கூர்க்காவை காண்பித்து எனக்கு சின்ன வயதில் சொன்னார்கள். அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள சில ஃபைல்கள் இன்னும் இன்றைய நேப்பாளத்து ஆட்களிடமும் இருப்பதாக நாம் நம்புவோமாக.
மகள்
மகளின் மீதான பாசத்தை சபீரின் கவிதையில் படித்து இருப்பீர்கள். அந்த வரிகள் எல்லாம் எல்லா தகப்பனுக்கும் / மகளுக்கும் பொருந்தும்.
சமீபத்தில் நான் பார்த்தAircrash Investigation லில் ஒரு தகப்பன் [ வெள்ளைக்காரர்] ஒரு கடற்கரை ஒரத்தில் ரெஸ்டாரன்ட் வைத்து இருக்கிறார். அது அவர் வாழ்ந்த இடத்துக்கு வெகு தூரமானது. அவரது ரெஸ்டாரன்ட்டின் கதவை திறந்தால் அந்த கடல் தெரியும். அப்படி என்ன இருக்கிறதென்றால் அந்த கடற்கறைக்கு பக்கத்தில் தான் , தான் ஆசையாக வளர்த்த மகள் பயணம் செய்த விமானம் கடலில் விழுந்து தனது மகளுடைய உடலுடன் தனது சந்தோசமும் புதைந்து விட்டதாக சொன்ன நிமிடத்தில் ஏதோ ஒரு சோகம் எல்லாரையும் தாக்க்கியதை உணர்ந்தேன்.அந்த விமான ட்ரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன். விபத்துக்கு காரணம் ஒரு சின்ன ஒயரிங் மிஸ்டேக். ஒரு பெரிய தொழில் செய்த ஒரு மனிதன் [ ஒரு பெரிய நகரத்தில் ] மகளின் பாசமும் பிரிவும் தாங்காமல் இப்படி ஒரு முடிவெடுத்து 'என் மகள் என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன்' என்று சொல்லும்போது ...வார்த்தைகள் இல்லை இனிமேலும் எழுத....
குப்பைப்பட்டினம்= AdiramPattinam
அதிராம்பட்டினத்தின் சுகாதார சீர்கேடுகள் இப்போது ரெட் அலர்ட்டில். நம் ஊரில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் பார்த்ததை செயல்படுத்தாமல் 'துபாயிலெ ரோட்டிலெ சோறு போட்டுத்தின்னலாம்"என லந்து பண்ணுவதால் வந்த விழைவா தெரியவில்லை; முன்பு இந்த டயலாக்கை பினாங்கு ஆட்கள் மொத்த குத்தகைக்கு எடுத்து இருந்தார்கள்.எங்கு பார்த்தாலும் பாலிதீன் பைகள்., டீ குடித்துவிட்டு கசக்கி வீசப்படும் லைட் பால்ஸ்த்ரீன் கப், குடி தண்ணீரும் ப்ளாஸ்டிக் பைகளில். ஊரு உருப்பட 200 வருசம் ஆகுமா?
ஊரில் உள்ள கொசுக்களுக்கு இப்போது உடனடை தேவை Fogging Mechine இது கொசுக்களை கட்டுப்படுத்திவிடும்.அதன் பிறகு ஊர் உருப்பட சில யோசனைகள்.
1. ஜும்மா பிரசங்கத்தில் சுத்தம் பற்றி எடுத்து சொல்ல வேண்டும்.
2. ஜும்மா போய் வந்தவர்கள் வீட்டில் வந்து சாப்பாட்டு தட்டையில் பாயுமுன் அங்கு என்ன சொன்னார்கள் என்று வீட்டில் உள்ளபெண்களிடமும் சொல்ல வேண்டும்.[ அப்போது சீரியல் இல்லாததால் எக்ஸ்ட்ரா தைரியத்தை வரவழைக்க வேண்டியதில்லை]
3. சின்ன வயது மாணவர்களிடம் சொல்லி நமது தெருவை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி அதன் முதல் படியாக "கூட்டு முயற்ச்சியில்" ஒரு விடுமுறை நாளில் எல்லோரும் சுத்தம் செய்யும் வேலையை தன் வேலையாக செய்ய வேண்டும்.நான் சிறுவனாக இருக்கும்போது எங்கள் தெரு மையவாடி & தெரு இரண்டையும் சுத்தம் செய்தோம். பிறகு அடுத்த நாள் தெருக்குளத்தை தூர் வாரும் வேளையை தெருவில் உள்ள அனைத்து ஆண்களும் செய்தோம்.
முயற்ச்சியை ஆரம்பிக்காமல் எதுவும் நடக்காது. முன்பு ஒருமுறை அதிரை போஸ்ட்டில் இது பற்றி ஒரு கட்டுரை படங்களுடன் வந்தது.
நம் ஊர் சுத்தக்குறைவாக இருப்பதற்க்கு ஆதாரமாக சில போட்டோக்கள் உடன் யாராவது எனக்கு அனுப்பினால் நன்மையாக இருக்கும். தமிழ்நாடு சுகாதார அமைச்சில் 2009 - 2010 பட்ஜெட்டில்Rs 383Lakhs இது போன்ற Epidemic Deseaseக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.
ZAKIR HUSSAIN
LABEL:-
இன்று 18 02 2011
1 comments:
இப்புடியெல்லாம் ஊர் இருந்தால் தேனிக்களின் கூட்டம் அங்கே வராது ஆகவே... சுத்தமா வைக்க முயற்சியுங்கள் மக்களே.. அங்கே ஒன்றல்ல ஓராயிரம் தேனீக்கள் கூடி கட்டிடும் தேன்கூடு இந்த தேன் துளியை சொட்டச் சொட்ட வைத்திடுவோம் !
Post a Comment