Saturday, July 9, 2011

வித்தியாசமானவர்கள் - பகுதி- 4

ZAKIR HUSSAIN 11:41 AM

இவர்களைப்பற்றி எல்லாம் எழுத ஆசைதான், ஆனாலும் நமது காமெடி பீஸ் ளின் லிஸ்ட் இன்னும் அமுத சுரபி மாதிரி வந்து கொண்டிருப்பதுதான் நமக்கு கொஞ்சம் சந்தோசம் [ எழுத மேட்டர் கிடைக்குதுல...மீட்டர் கிடைக்காட்டியும் பரவாயில்லை என எழுதுவோம்...]
கஞ்ச ஆத்மா. இதை இங்குள்ள மார்க்கெட்டில் அதிகம் பார்க்களாம். வயதான சில சீனப்பெண்மனிகள் தன் வீட்டுக்கு மார்க்கெட் சாமான் வாங்க வரும்போது செய்யும் உத்திகள் பல பொருளாதார நிபுணர்களுக்கு வருவதில்லை.

பூண்டு வாங்கும்போது பூண்டை சுற்றியுள்ள தோல்களை கசக்கி கீழே தள்ளிவிட்டு பூண்டை மட்டும் தராசில் போடும் லாவகம் [ தோல் வெயிட்டுக்கெல்லாம் காசு கொடுக்கமுடியாதுல்ல], வெங்காயம் ,கத்தரிக்காய் எடுத்து ஏதொ வெளிக்கிரகத்திலிருந்து வந்த பொருளை பார்ப்பதுபோல் சுற்றி சுற்றி பார்ப்பது [ சத்தியமா சொல்றேன் அப்படியே அந்த கத்தரிக்காயில் பூச்சி இருந்தாலும் இந்த தேவதைகள் கைபட்டு பஸ்பம் ஆகிவிடும்].
வெண்டிக்காயை குறைந்தது ஒரு 30 வருடமாக வாங்குவார்கள் என நினைக்கிரேன், இருப்பினும் பிஞ்சுக்காய் என பார்ப்பதற்கு நுனி உடைப்பதுதான் ஜக்கி ஆகும். கையில் எடுத்து பார்த்தாலே தெரியாதா?. இதுவெல்லாம்தான் காய்கறிக்கடைப்பையன் எப்படி தீவிரவாதியானான் என திரைக்கதை எழுத காரணமாகும் சீன்கள்.
தங்கச்சிய நாய்கட்சிடுச்சிபா” பார்ட்டி: பழசைதிருப்பி திருப்பி மறு ஒலி/ஓளி பரப்பும் ஆட்கள இது. எனக்கு தெரிந்த ஒருவர் முன்பு ஊரிலிருந்து வந்த லட்டரை இன்னும் பாதுகாத்து வைத்து 'இவன் இப்படியெல்லாம் எழுதுனவன்' என்று தனது உறவினரை எப்போதும் கரிச்சு கொட்டுவார். இதில் கொடுமை என்னவென்றால் அப்போது இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு தபால் எழுத 6 ரூபாய்தான் ஸ்டாம்ப்.[ பகுருதீன் அலி அகமது ஜனாதிபதியாக இருந்த காலம்]. அந்த தபால் எழுதிய உறவினர் இப்போது வளர்ந்து பேரப்பிள்ளை எடுத்திருக்க கூடும். அவர் நிம்மதியாக இருக்க கூடும் [ நான் தான் இந்த பெரியவரிடம் மாட்டிக்கொண்டேன் என நினைக்கிறேன்..கோபமாக தபால் எழுதும் கணவான்களே கொஞ்சம் பார்த்து எழுதுங்கப்பா..]

இங்கிதம் இன்னாசி: இவர்களின் அனிச்சை செயல் மிகவும் வித்யாசமானது. நல்லபடியாக பேசிக்கொண்டிருக்கும்போது திடீர் என கையில் கிடைக்கும் கார் சாவி, ரேனால்ட் பேனா மூடி போன்றவற்றை காதில் விட்டு குடைய ஆரம்பித்துவிடுவார்கள். அதற்க்கு பிறகும் அவர்களிடம் கை குலுக்குபவர்கள் ..'கண்ணிருந்தும்___________________"
நெகட்டிவ் நெல்லீஸ்வர். இவர்கள் எந்த விசயத்தை எடுத்தாளும் ஒரே கெட்ட சகுனமாக பேசுவார்கள். ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் என ஐடியா கேட்டால் போதும் எஃப் எம் ரேடியொ மாதிரி பேசுவாங்க பேசுவாங்க பேசிக்கிட்டே இருப்பாங்க. ஆனால் ஒரு விசயம் கூட பாசிட்டிவ் ஆக இருக்காது . கண்ணாம்பாள் ரேஞ்சுக்கு சோகத்தை பிழிந்து எடுத்து ஜூஸ் எடுத்து கொடுத்து உங்களை வதைத்து கடைசியில் ஒரு பிட் எடுத்து போடுவாய்ங்க பார்க்கணும். மாப்லே காசை என்கிட்டே கொடு நான் எப்படி டெவலப் பண்ரேன் பாரு......இந்த வசனத்தில் மயங்குபவர்களுக்கு 7 1/2 ஆரம்பித்து விட்டது என துண்டு போட்டு தாண்டலாம்.
"நீதான் உதவனும்"
வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி பணம் கேட்கும் இவர்கள்தான் இப்போதைக்கு டேஞ்சர் பார்ட்டி. இவர்களிடம் லாஜிக் பேசி தப்பிக்கலாம் என நினைத்தால் நீங்கள் குணசீலத்திலோ, ஏர்வாடி, முத்துப்பேட்டையிலோ லேன்ட் ஆகலாம். [ அந்த அளவுக்கு அவர்கள் குழம்பாமல் உங்களை குழப்பி விடுவார்கள்] இவர்களிடம் 5, 6 சோகக்கதை இருக்கும் ஆளுக்கு தகுந்த மாதிரி ஒலிபரப்பி பல வருடமாக [ சன் டி வி தொடங்குமுன் ] சீரியலை மிஞ்சி அழுது பணம் பார்த்து விட்டார்கள். [ இதில் உண்மையான ஏழைகளும்,அவர்களின் கஸ்டமும் உண்மை] ஆனால் ஒரு 30 - 40 வருடமாக எப்படி வாங்கி சாப்பிட்டே [ உழைக்காமல்] காலம் தள்ள முடிகிறது என்பதை இவர்களிடம் பிஸ்னஸ் மேனேஜ்மன்ட் கற்றுத்தரும் பல்கலைக்கழகங்கள் கற்றுக்கொள்வது நல்லது.
இருந்தாலும் இவர்களுக்கு போதுமான அளவு பண உதவி செய்ய முடிய வில்லையே என ஒருமுறை வருத்தப்பட்டேன், உடனே என் நண்பர் சொன்னது ' அட விட்டுத்தள்ளுங்க... A. T. M மெசின் எப்போதாவது வருத்தப்பட்டிருக்கா?"
அது என்ன A.T. M மெசின்?
ஆமா அவங்களைப்பொருத்தவரை நீங்கள் ஒரு A.T.M மெசின். இந்த ATM மெசினில் பணம் வரவில்லை என்றால் அடுத்த மிசினில் போய் தட்டிப்பார்க்க கிளம்பிடுவாய்ங்கள்ள...இதுக்கெல்லாம் அவர்கள் உங்களை மாதிரி வருத்தப்பட்டா அன்றாட டூட்டி பாதிக்கும்ல.."
- ZAKIR HUSSAIN

5 comments:

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

chicha.in said...

hii.. Nice Post
For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

www.ChiCha.in

HM Rashid said...

waste post..time consuming...

Riyaz Ahamed said...

சலாம்

அது என்ன A.T. M மெசின்? ஒன்னும் தெரியா சின்ன புள்ளே நீங்க

Post a Comment

உமர் தமிழ்