
சமீபத்தில் டி வி யில் நாளை நமதே மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் 30 வருடம் பின்னோக்கி செல்லவும்...வலையம் வலையமாய் கற்பனை செய்துகொள்ளவும். இதே படத்தை முத்துப்பேட்டை கீத்துகொட்டகையில் பார்த்தது.கந்தூரி நேரம் 2nd show. முன்பு ஆசை ஆசையாய் பார்த்த சீன் எல்லாம் இப்போது பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது. எம்ஜியார் தம்பியாக வரும் தெலுங்கு நடிகர் ஏதோ மரப்புக்கு துணி தைத்ததுபோல் ஒரு வித்தியாசமான கலரில் கோட்டு போட்டு கிட்டாரை கையில் வைத்து கொண்டு பாட்டுபாடி அண்ணனை தேடுவது "என்ன கொடுமை சார் இது!".
பேப்பர், டி வி எல்லாம் இருக்கும் காலத்தில்தான் படம் எடுத்து இருக்கிறார்கள்.முத்துபேட்டையி
இது வரை புரியாத புதிர்
எப்படி இது போன்ற லாஜிக் உதைத்த படங்கள் தொடர்ந்து ஓடியது?..
.எப்படி இதுபோன்ற ரயிலில் தொலைந்து போகும் பிள்ளைகளுக்கு சிம்பிலாக பெயர் வைக்கிறார்கள் [ உ-ம்: விஜய் / ராமு / ராஜா / விஜி ] ஏன் விஜய மார்த்தான்டன் / முத்து ராமலிங்கம் ..அட்லீஸ்ட்..கார்த்திகேயன் என்று வைப்பதில்லை?.எம்ஜியார் ஏன் பணக்காரர்களிடம் கொள்ளையிடுகிறார் என்று இன்றைக்குவரை தெரியவில்லை.அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுப்பது [ நாகேஷ் மூலம்] அப்போதைக்கு பெரிதாக தெரியவில்லை...இப்பொது யாரும் அப்படி செய்தால் ஜெயிலில் களி நிச்ச்யம்.
ZAKIR HUSSAIN