Saturday, February 26, 2011

ஸ்தானம் தவறிய கூட்டல்! -சபீர்

தேன்துளி Then Thuli 9:43 AM

 ஸ்தானம் தவறிய கூட்டல்!
இயலாமை
இளமையை தின்று
இருந்து எழுந்த
இடமெல்லாம்
ஏக்கம் தேங்க...
மனசும் உடலும்
முயன்ற
பரஸ்பர ஆறுதல்
விரக்தியில்
தோற்க...
சுவாசக்காற்றை
வேகவைத்த
தனிமை
கரியமில வாயுவில்
பெருமூச்சாய் வெடிக்க...
பத்திரிக்கையின்
காதல் கதைகளில்
பரவசம் கண்டு...
பருவம் முடியும்
தருவாயிலும்
வருவானென
மயக்க விளிம்பில்
முதிர்கன்னிகளும்..
.
ஆங்காங்கே
அவல முடிச்சுகளில்
செல்வக் கொழுப்பில்
ஏழை இளஞிகளை
மணந்த களிப்பில்
முதியவர்களும்...
 
ஒன்று ஒன்றோடும்
பத்து பத்தோடும்
நூறு நூறோடும்
எனவல்லாது-
இலக்க ஸ்தானம்
மாறிய கூட்டலும்
இலக்கண சாஸனம்
மறுவிய கூடலும்
எப்படி கணக்கிட்டாலும்...
இடறும் விடை
முடங்கும் விடியல்!
 -சபீர்

LABEL:-

6 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதானே... அதெப்படி கூட்டல் சரியாகும் !? அறுபத்தி ஒன்பதில் பத்தொன்பதை கழித்தால் = பொன்விழாவாமே !? அப்படின்னா அந்தப் பெண்ணுக்கு என்ன விழாவாக இருந்திடும் !?

Shameed said...

ஒரு சில பெருசுகள் 40 முடிந்த பின் கணக்கை கன கட்சிதமாக போட்டுவிடுகின்றன

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இளமையின் மூச்சுக்குழாயில்
முடிச்சி! பலாவின் இடுப்பில் சொருகும் கத்தி! முடிந்துவிட்ட இளமைக்கு இளைமை இறை கேட்கும் பிசாசு வயோதிகம் அது பண ஆதிக்கம் கூடிய திமிர். பாவம் முதிர்கண்ணிகளின் சாபம்.இப்படிபடியே கால மெல்லாம் முனக்கி சாவதுதான் நல்ல ஆன்மையுள்ள உன்மை ஆண் மகன் வரும் வரை.

sabeer.abushahruk said...

கிரவுன்,
உடம்பு தேவலாமா?

crown said...

sabeer.abushahruk said...
கிரவுன்,
உடம்பு தேவலாமா?
----------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும் .காக்கா உங்களுக்காகவே ஓடி வந்தேன்.இன்னும் உடல் நிலை சரிவர நிலைக்கு வரவில்லை.துஆ செய்யவும்.

Post a Comment

உமர் தமிழ்