Saturday, March 12, 2011

போனா போவுது வாங்க...............ரியாஸ்

தேன்துளி Then Thuli 2:35 AM

போனா போவுது வாங்க



...
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது ( 4 : 103 )

அன்றாட வாழ்வில் ஒன்று  " இந்த மனை சென்ற வருஷம் விற்பனைக்கு என்னிடம் வந்தது, வாங்க வசதி இருந்தும் வாங்காமல் விட்டு விட்டேனே!! இப்பொ 4 , 5 ,மடங்கு விலை ஏறிடுச்சே!. அப்போவே வாங்கி இருந்தால் நல்ல "லாபமாசே"!இப்படி பலவற்றில் லாபம் கிடைப்பது கண் முன்னே தெரியும் போது மனசு லப்போ லப்போனு அடித்து கொள்வது மனித இயல்புதான் சரி, இந்த மனித இயல்பு மார்க்கத்தில் எந்தளவு? பார்க்கலாமா?

இஸ்லாத்தின் தலையாய கடமை  தொழுகை. திருமறை குர் ஆனிலும், நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் தொழுகைக்கு
வழங்க பட்டுள்ள அளவுக்கு வேறு எதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் தமது மரணத்தருவாயில் தொழுகையை பேணுங்கள்  தொழுகையை பேணுங்கள்  என கூறி கொண்டே இருந்தார்கள் -  உம்மு சல்மா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (இப்னுமாஜா).  நபிகள்   நாயகம் நபி (ஸல்) அவர்கள் தொழுகையை பற்றி கூரிக்கொண்டிருந்ததது மட்டுமல்ல , தன்னால் முடியா நிலையில்  இருவர் தோளில் தொங்கி கொண்டும் ,கால்கள்   தரையில் கோடு போட்டுகொண்டே செல்லும் அளவுக்கு முடியாத நிலையுலும் பள்ளி  சென்று தொழுதார்கள்.

முஸ்லிமையும் , முஸ்லிம் அல்லாதவர்களையும் வேறுபடுத்தி காட்டுவதில் முக்கிய பங்கு இந்த தொழுகைதான். தற்போது பெரும்பாலான முஸ்லிம்களை தொழுபவர்களாக காண முடிகிறது. "அல்ஹம்துல்லிலாஹ்". அதே நேரத்தில் ஒன்றை மனதில் வைக்கவேண்டும், நபி (ஸல்) அவர்கள் தான் நமக்கு முன் மாதிரி அவர்கள் தொழுகையை இப்படி காட்டி தந்தார்களோ அது போல் தொழுவதையே அல்லாஹ் ஏற்றுகொள்கிறான்.   மணிகணக்கில் தொழுதாலும் நபி (ஸல்) காட்டி தராதது, எந்த புண்ணியமும் இல்லாமல் போகும்.

தமது தொழுகையில் கவனமற்று தொழுபவருக்கு கேடுதான் (107 : 4 ,5 )

கவனமற்று    சோம்பலுடன்,   சரியான நேரத்தில் தொழுவதில்லை.பிறர் பார்பதற்காக,  தொழுவது   இப்படி பல...இனி நம் நிலையை நாமே பார்க்கலாமே..

1
அதிகமாக தவற விட்ட தொழுகை எது?

பாஜர் (சுபுஹு) தொழுகையை தொடர்ந்து தொழும் பழக்கம் உண்டா? இல்லையா?

நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்தபடி தொழுகிறோமா?

உபரி தொழுகைகளை தொழுகிறோமா ? 

 
இந்த கேள்விகளுக்கு நம்முடைய பதில்?
போனது போகட்டும், குறை இருப்பின் அவற்றை சரி செய  என்ன முயற்சி செய்ய போகிறோம்.




2 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்ஷா அல்லாஹ் !

நினைவூட்டியதற்கும் குட்டியதற்கும் ஜஜாக்கால்லாஹ் !

Unknown said...

காலங்கள் மாறளாம்
நேரமும் மாறளாம்
நேற்றும்,இன்றும்
கூட ஓடலாம்
ஒன்பதை எட்டால்
பெருக்கினால்
எழுபத்திரண்டு
அதை ஒன்றுடன்
சேர்த்தால்
எழுபத்திமூன்று
கூட்டங்கள்
மறுமையில்
இதுவாம்
அக்கூட்டத்தில்
சேர்வோம்
ஒன்றாய்

Post a Comment

உமர் தமிழ்