ஹாஜி A.M. அப்துல் காதிர் M.A.B.Ed
அடுத்த பேட்டிக்கான ஆயத்தத்தில் இருக்கும்போது எனக்கு கிடைத்த டெலிபோன் தொடர்பில் கிடைத்தவர் ” வாவன்னாசார்” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் ஹாஜி A.M. அப்துல் காதிர் M.A.B.Ed அவர்கள்…
அவரிடம் நலம் விசாரிக்கும்போது " கொஞ்ச காலமா நடக்கமுடியாமெ , உடல் நலக்குறைவா இருந்தேன்...இப்போது பரவா இல்லை..அனேகமா உங்கள் பேட்டியெ பார்த்த பிறகு எங்களைப்பற்றி என் பழைய மாணவர்களுக்கு ஞாபகம் வரலாம்' என்று சொன்னவுடன் என் மனது கணத்தது. ஒரு ஆச்சர்யம் எங்களுக்கு படித்து கொடுக்கும்போது அவர் எப்போதும் நடைதான், அவர் சைக்கிளில் வந்ததை கூட நான் பார்த்ததில்லை. அதனால் அப்போது அவருக்கு சைக்கிள் ஒட்டத்தெரியுமா எனும் சந்தேகமே இருந்தது.
? நீங்கள் படித்தது , பிறகு ஆசிரியர் ஆன காலம் பற்றி....
படித்ததெல்லாம் Khadir Mohideen college [P.U.C] பிறகு ஹாஸ்டல் ஆபிசில் வேலை, பிறகு டிராயிங் மாஸ்டராக எக்ஸாம் எழுதி நமது Khadir Mohideen High School லில் டிராயிங் மாஸ்டராக வேலை பார்த்தது, பிறகு ஒரத்த நாட்டில் ஆசிரியர் பயிற்சிக்காக B.Ed …முடித்து அப்புறம் உங்களுக்கெல்லாம் சரித்திரம் பாடம் எடுத்தது...அப்போது நமது ஸ்கூல் ஹையர் செக்கன்டரி வந்து விட்டது, உங்களுக்கு பாடம் எடுக்கும் முன்னமே நான் தனியாகவே B.A. எக்ஸாம் எழுதி பாஸ் செய்து விட்டேன். அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைவு , எனவே நான் துபாய் போய் வேலைபார்த்தேன் ஒரு பிரின்டிங் கம்பெனியில், என்னுடன் வேலைக்கு வந்தவர்களில் தூர்தர்ஸனில் வேலை பார்த்த அப்துல் ரஜாக் இருந்தார். 1982 லிருந்து 19 வருடம் துபாயில் காலம் ஓடி விட்டது, 1983ல் வாலன்ட்ரி ரிட்டயர்மென்ட்டுக்கு அப்ளை செய்திருந்ததால் எனக்கு இப்போது பென்சன் இல்லாத ரிட்டயர்மென்ட்.
? மறக்க முடியாத அனுபவங்கள் / மாணவர்கள் பற்றி...
'நீங்கள் எல்லாம் ஹையர் செக்கன்டரி முடிந்து போகும் போது நடத்திய சோசியல் ப்ரேக் அப் தான். அப்போது நான் என்ன பேசினேன் என்று கூட ஞாபகம் இருக்கிறது...'
சார் அது நடந்தது 1980- அல்லது 81 எனநினைக்கிறேன். 30 வருடம் ஓடி விட்டது.அந்த நிகழ்ச்சியின் மொத்தமும் நான் ஆடியோ கேசட்டில் எடுத்தேன் ...இன்னும் அது என் கிட்டே பத்திரமாக இருக்கிறது.- இது நான்
'அப்டியா இன்னும் பத்திரமா இருக்கா?'
மறக்க முடியா மாணவர்களில் மாஜிதா ஜுவல்லரி வைத்திருக்கும் என் மாணவன் சுபஹத்துல்லாஹ்...ஏதோ ஒரு முறை நான் செய்த அறிவுரையை இன்னும் கடைபிடிக்கிறேன் என சொன்னது...
என் வீட்டில் பிள்ளைகள் எல்லோரும் என்னை ஏதாவது இணையத்தில் எழுத சொல்கிறார்கள் ..இன்ஷா அல்லாஹ் உடம்பு ஒத்துழைத்தால் ஏதாவது எழுதத்தான் வேண்டும்..இப்போது பேரப்பிள்ளைகளுக்கு படித்து கொடுத்து கொண்டிருக்கிறேன்.
….நீங்கள் எழுதனும் சார்...உங்கள் கூடப்பிறந்த தம்பி யூனிகோட் உமர்தம்பி அவர்கள் கம்ப்யூட்டர் உலகில் ஏற்படுத்திய பயன்பாடுகள் மிகவும் உயர்ந்தது.. அவரின் யூனிகோட்தான் நான் இன்னும் பயன்படுத்துகிறேன்.- இது நான்
? சார் உங்கள் குடும்பம் பற்றி...
1 மகள், 2 மகன்கள்..எல்லோருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. நானும் 12 வருடத்துக்கு முன் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டேன்...அது சரி...நான் ஒரு கேள்வி கேட்கிறேன். என்னைப்பற்றி உன் கமென்ட்ஸ் என்ன?...
நான் படித்த காலத்தை வைத்தே சொல்கிறேன். ரொம்ப சிம்பிள் டைப் மனிதர். யாரையும் கடிந்து கொள்ளாத அமைதியான ஆசிரியர். இதை எல்லோரும் ஆமோதிப்பார்கள் என்பது அந்த எல்லோருக்கும் தெரியும்...
கொஞ்சம் சிரித்து விட்டு "ஊருக்கு வரும் போது வந்து என்னை பார்த்து விட்டுப்போ"....இந்த அன்பான , உரிமையான வார்த்தையில் டெலிபோனை வைக்க மனமில்லாமல்.."இன்ஷா அல்லாஹ்..வந்து பார்க்கிறேன் சார்' என்று சொன்னேன்.
ZAKIR HUSSAIN
நன்றி: சகோதரர்கள் மொய்னுத்தீன் உமர்தம்பி / அபு இபுறாஹிம்
2 comments:
ஆஹா!
என்ன அற்ப்புதமான பேட்டி,' மாஷா அல்லாஹ்'
'வாவன்னா' சார்” அவர்களின் முதுமையான் புகைப்படத்தினை கண்டு மனம் கனத்தது! காரணம் எனது நினைவில் இருப்பதெல்லாம் அவர்களின் இளமையான உருவம்தான்
.நான் காதிர் மொஹைதீன் உயர் நிலைப்பள்ளியில் படித்த 6 - வகுப்பிலிருந்து 9 -ஆம் வகுப்புவரைய்லான காலகட்டத்தில் ,ஓவிய ஆசிரியராக இருந்தார்கள் . பின்னர் நன் 10௦-ஆம், வகுப்பு படிக்கும் போது சரித்திர பாட ஆசிரியராக வந்து முதன் முதலில் 'குவைத்தை; பாடமாக நடத்தியது இன்றும் எனது மனதில் உள்ளது
நான் 'நியூ இந்தியா' கையெழுத்து பத்த்ரிக்கையில் போட்ட படங்களை பள்ளி ஆண்டு விழாவில் பாராட்டி பேசியது இன்றும் என் மனதில் இனிக்கிறது!
!
உடல் நலம் பெற்று நீண்டகாலங்கள் நலமாய் வாழ அல்லாஹ் விடம் துஆ செய்கிறேன்
அன்புடன்,
ஹாஜா இஸ்மாயில்.
அல். ஜுபைல் சிட்டி , சவுதி அரேபியா
சலாம்
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் வருங்கலத்தில் இப்படி இப்படி சிறப்பாக இருக்கணும் என ஆசை படுவார்கள் ஆனால் ஆசிரியர் எல்லா பெற்றோரின் பிள்ளைகளும் சிறப்பாக இருக்க பாடுபடுபவர்கள் என்ற விதத்தில் தனி சிறப்பு பெற்றவர்கள் - இவர்களில் எனக்கு பிடித்தவர்களை பார்க்க வேண்டும் என என் மனதில் சின்ன ஜோதியாக எரிந்து கொண்டிருந்ததை தீபிலம்பாக்கிய ஜாகிரை என்னென்னு சொல்றது கிரேட்.5 தேதி வாவன்னசாரை பார்த்தேன், அவருடன் பேசி கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியலே, உபசரிப்பிலும் சார் நம்பர் ஒன்
Post a Comment