லார்கோ வின்ச largo winch
நண்பர்களே!! "இரத்தப்படலம்" காமிக்ஸ் பற்றி சென்ற எனது பதிவில் எழுதி இருந்தேன் அல்லவா?அந்தக்கதையை உருவாக்கி எழுதிய “Jean Van Hamme” அவர்களின் மற்றெரு புகழ் பெற்ற கதாபத்திரத்தை கொண்ட கதைதான் லார்கோ வின்ச
தமிழில் 'இரத்த படலம் காமிக்ஸின் வெற்றியை தொடர்ந்து. "வான் ஹமே" அவர்களின், லார்கோ வின்ச கமிக்ஸையும், தமிழில் வெளியிட போவதாக திரு எஸ். விஜயன் அவர்கள் அறிவித்துள்ளார். எனவே அந்த காமிக்ஸ் வருமுன் நாம் அதைபற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
கதையின்படி பெரும் பணக்கார பிரமச்சாரியான ‘Nerio Winch’ தன்னுடைய திரண்ட மொத்த சொத்துகளுக்கும், வாரிசாக ஆயிரகணக்கான மைல்களுக்கு அப்பால்‘Yugoslavia’ -வில் பிறந்து அனாதையான ‘Largo Winczlav’ என்ற சிறுவனை தத்தெடுத்து அவனுக்கு, உயர்ய்க்கல்வியும் , மற்ற வசதிகளும் செய்துதருகிறார்.
இதன்பின் பல ஆண்டுகளுக்குப்பிறகு, லார்கோ வின்ஸ்லாவ் வாலிப வயதை அடைந்த சமயத்தில், அவனது வளர்ப்பு தந்தையான ‘Nerio Winch’ மர்மமான முறையில் இறந்துவிட அது படுகொலையா? இயற்க்கை மரணமா? என்பது ஒருபுறமிருக்க, அப்போதுதான் வின்ச் நிர்வாக குழுமத்திற்கு (W Group) அதிரடியாக,அதிர்ச்சிகரமான உண்மையாக - ‘Largo Winczlav’ தான், ‘Nerio Winch’-ன், முழு பத்து பில்லியன் டாலர் பொருமானமுள்ள மொத்த கம்பெனிகளுக்கும், வாரிசு என தெரிகிறது.
ஆல்பங்கள்! French, (பிரெஞ்சு)
மற்ற செல்வந்தர்களைபோல், லார்கோவும் ஒரு உல்லாச விரும்பியாக உலகை சுற்றினாலும், இக்கட்டமான் சமயங்களில் அதிரடி சாகசங்கள் புரிவதிலும், வல்லவன்.
முதன்முதலில் துருக்கியில் தொடங்கும் அவனது சாகசம், நாடோடியாக உலகை சுற்றும், இந்த கால கட்டத்தில், இடத்திற்கு இடம், நாட்டிற்க்கு நாடு, என புதிய அவதாரங்களை எடுக்கிறது. ஒரு புறம் வின்ச் குழுமத்திற்கு எதிராகவும், மறு புறம் ஊர்சுற்ரலில்,விளையும் விபரீதத்திற்கு எதிராகவும், லார்கோவின் போராட்டமே!! 'வான் ஹமே' அவர்களால், தனக்கே உரித்தான மித மிஞ்சிய திறமையினால் அழகான வீர காவியமாக படைக்கப்பட்டுள்ளது.
ஒவொரு கதையும் இரண்டு பாகங்களில், தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது .முதல் பாகத்தில் லார்கோ மீளமுடியாத பயங்கர சிக்கலில் மாட்டிகொள்வதாகவும், இரண்டாம் பாகத்தில் அந்த பயங்கரத்திலுருந்து ‘சாகசமாக’ தப்புவதையும், அந்த பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளவர்களை வெளிக்காட்டுவதாகவும், அமைக்கப்பட்டுள்ளது.
1970 களில், தொடர் நாவலாக 'வான் ஹமே' அவர்களா எழுதப்பட்டு, பின்னர் 1977 ல், MERCURE DE FRANCE என்ற பதிப்பகத்தின் மூலம், முழு நாவலாக வெளியிடப்பட்டது என்றாலும், வான் ஹமே எதிர்பார்த்த வெற்றியினை அடையவில்லை.
இதே நேரத்தில் 'Thorgal' (தோர்கல்) என்ற புதிய சித்திரக்கதை ஆல்பத்தை ஓவியர் "Grzegorz Rosinski மூலம் வெளியிடுவதில் வான் ஹமே முழு கவனமும் செலுத்தி வந்ததால் ,திருவாளர் லார்கோவை கவனிக்க முடியாமல் போனது.
ஓவியர் “Philippe Francq”
இதன்பிறகு பிரபல ஓவியர் “Philippe Francq” அவர்கள், வான்ஹமே அவர்களுடன் இணைந்து, பணியாற்ற விரும்பியதால், கிடப்பில் போடப்பட்ட லார்கோ வின்ச கதாபாத்திரம் மீண்டும் சில மாற்றங்களுடன் உயிர் பெற்று எழுந்தது. 1988 ல், இருவரின் ஒத்துழைப்பிலும்,'லார்கோ வின்ச' முதல் காமிக்ஸ் ஆல்பமாக DUPUIS என்ற பெல்ஜிய பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டு வெற்றிவாகை சூடியதால் அதை தொடர்ந்து இதன் புதிய ஆல்பங்களும் வெளியிடப்பட்டன.
.
வான் ஹமே அவர்களின் ஒவொரு கதபாத்திரத்திற்க்கும் ஏற்றவாறு சிறந்த்த ஓவியர்கள் அமைந்து விடுவது என்பது அவரின் அதிஷ்ட்டத்தின் வெற்றியாகும். இதில் லார்கோவின் ஓவியர்“Philippe Francq” அவர்கள் தனது பிரமிக்கத்தக்க தனது சித்திரங்கள் மூலம் நம்மை கிரங்க வைக்கிறார் என்றால் அது மிகையல்ல.
இதுவரை மொத்தம் 18 ஆல்பங்கள்! French, (பிரெஞ்சு) மொழியில் வந்துள்ளது. அவைகள் முறையே! Danish, Dutch, German, Portuguese, Serbian , Spanish, English, ஆகிய உலக மொழிகளில் ,மொழிபெயர்க்கப்பட்டு ஒவொன்றாக தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன இதுவரை உலகில் பத்து மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது . ஆங்கில பதிப்புகள் "CINEBOOK(UK) LTD மூலம் வெளிவருகின்றது..
2001 - ல்,canadian Showcase Television மூலம் சின்னத்திரையிலும், 2002ல், Dupuis , Ubisoft ஆகிய நிறுவணங்கள் மூலம்,(Largo Winch: Empire Under Threat) வீடியோ கேம்ஸாகவும், 2008 -டிசம்பர் 17 -ல், Jérôme Sallem அவர்கள் இயக்கத்தில்,Tomer Sisley -யின் நடிப்பில் திரைப்படமாகவும் வந்துள்ளது.
கடிசியாக கிடைத்த செய்தி என்னவெனில்!! லார்கோ வின்ச காமிக்ஸ்கள் முத்து காமிக்ஸில், அதன் ஆசிரியர் எஸ். விஜயன் அவர்கள் வன்ன்கல்ரில் ரூ- 25 விலையில், வெளியிட முடியு செய்துள்ளார் என்பதே!! நமது முத்து காமிக்ஸில் தமிழில் வரவிருக்கும் "லார்கோ வின்ச" ஆல்பங்களை, தமிழ் கூறும் நல்லுலகம் இரு கை கொண்டு வரவேற்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அன்புடன்,
ஹாஜா இஸ்மாயில்.எம்
பிரெஞ்சு மொழி ஆல்பங்களின் தலைப்புகள்.
- L'Héritier
- Le Groupe W
- O.P.A.
- Business Blues
- H
- Dutch Connection
- La Forteresse De Makiling
- L'heure du tigre
- Voir Venise...
- ...Et mourir
- Golden Gate
- Shadow
- Le Prix de l'argent
- La Loi du dollar
- Les trois yeux des gardiens du Tao
- La Voie et la vertu
- Mer noire
- Colère Rouge
ஆங்கில பதிப்புகள் (சினி புக்)
ஆங்கிலத்தில் (சினி புக்) வந்தவை
- The Heir (includes The W Group)
- Takeover Bid (includes Business Blues)
- Dutch Connection (includes H)
- The Hour of the Tiger (includes Fort Makiling)
- See Venice...
- ...And Die
- Golden Gate
- Shadow
.சினி புக் முகவரி
CINEBOOK LTD
56 Beech Avenue - Canterbury, Kent - CT4 7TA - UK
Tel (44) 01227 731 368 - Fax (44) 01227 738 878
Email: info@cinebook.co.uk - Website: www.cinebook.com
இந்தியாவில்
Westland Ltd
Fax: 044-26642794
enq@westland-tata.com
LABEL:-
Haja Ismail
,
largo winch
6 comments:
ஹாஜா,
வாசிக்க முடியவில்லை. கவனி!
ஹாஜா.....இந்த எழுத்துக்கள் என்ன என்று போட்டி எதுவும் வைத்திருக்கிறோமா?....சொல்லவே இல்லே.....
எழுத்துருவின் பெயரைச் சொன்னால் மாற்றி வாசிக்கலாமே !
தோழர்களே!!! இப்போது படித்து விட்டு கருத்துகளை பதிவு செய்யுங்கள்
பிரமிக்க வைத்திருக்கீங்க !... அப்படின்னா இங்கேயும் ஒரு எட்டுப் பார்வை என்றுமே இருந்திடும்...
அருமை நண்பரே,
அற்புதமான நடையில் அமைந்துள்ள இந்த பதிவானது விஜயன் சார் லயன் காமிக்ஸில் கதையை வெளியிடுவதற்கு முன்பாக உங்களின் மூலமாக எங்களுக்கு எல்லாம் ஒரு ட்ரைலர் பார்த்தது போல இருக்கிறது.
மற்றுமொரு விஷயம்: இந்த படத்தின் இரண்டாம் பாகம் சென்ற வெள்ளியன்று ரிலீஸ் ஆகிவிட்டது.
Post a Comment