Saturday, April 2, 2011

என் சாய்வு நாற்காலியிலிருந்து...!

தேன்துளி Then Thuli 11:04 PM

என் சாய்வு நாற்காலியிலிருந்து...!
            (சிற்சில வாழ்வியல் உணர்வுகளின் தொகுப்புத் தொடர்..1.)

 

                                                                                  


கதவு தட்டப்படுகிறது!
யாரது...
தட்டி அழைப்பது?
என் விடிகாலை கனவை                          
வெட்டி அழிப்பது?                                    

என்னை அழைத்தா -என்
பெண்ணை அழைத்தா -அவள்
அண்ணை அழைத்தா - அல்லது
அண்ணன் அழைத்தா?

ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல
அவசரக்காரனுக்கும்
புத்தி மட்டுதான் -
அன்றேல்...
அடித்து அழைக்காமல்
அழைப்பு மனியை
அழுத்தி அழைத்திருப்பான்.

இவ் விடியற்காலையில்
இத்தனை சப்தமாய்
இம்சிப்பது யார்?

மூளைக்குச் சொல்லி
முனக வைக்கும் பொறுமையின்றி
முழங்கால் வாய் முளைத்து
முழங்கிய மூட்டுவலி
சற்று நேர முன்புதான்
நித்திரை தொட்டது.

ஓடியாடி ஓயுமுன்
ஒத்திகையாய்
உழைப்பிலிருந்து ஓய்வு பெற்று
உள்ளரையில் ஒதுங்கிய
என்
உறக்கம் களைப்பது
யாரது?

கதவு தட்டப்படுகிறது...                                       


தொடரும்...


Sabeer Ahamed

LABEL:-

5 comments:

crown said...
This comment has been removed by the author.
crown said...

சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஓய்வு எடுக்கும் போது கண்ட இனிய கனா விலகிவிடும் படி கதவில் தட்டி இனிய கணவினை வெட்டி விட்டதாரு? அருமையா வார்தை ஜாலம்.இவருதான் சொல்வார் கிரவுன் எப்படி உங்களுக்குமட்டும் வார்தை கை கட்டி முன்னே வந்து நிற்கிறதுன்னு.. இங்கே மட்டும் என்ன வாழுதாம்???? .இப்படியெல்லாம் வார்தையை அர்தம் மாறாமல் சொல்லவந்ததை சொல்ல ஒடித்தும்,கிழட்டியும்,மாற்றியும் மாட்ட முடிகிறதே! இதன் பெயர்தான் அவை அடக்கமோ? இதில் உங்கள் திறமைகளும்,புலமைகளும் சொல்ல இங்கே இடம் இருக்கா> அவையெல்லாம் இங்கே அடக்க முடியுமா? அடுக்கத்தான் முடியும்.தொடருங்கள் சாய்ந்து கிடக்கும் நாற்காளியும் நிமிரும் வண்ணம்.

April 3, 2011 3:38 AM

Post a Comment

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//யாரது...
தட்டி அழைப்பது?
என் விடிகாலை கனவை
வெட்டி அழிப்பது?//

கொட்டிக் கொடுத்தாலும் தடவி எழுப்ப மாட்டாங்க காக்கா...

அருமையான என்னுள்ளம் ரசித்த வரிகள் !

அது சரி தொடரா... சொல்லவே யில்லை ! நாற்காலியில சய்ந்து உட்கார வயசு வந்துடுச்சா ! பலே பலே !

தேர்ந்தெடுத்து இட்டிருக்கும் படம் தலைப்பில் அருமையான படம் கவிதைக்கு கவிதை... குப்புற படுத்திருப்பவளை நான் கவனிக்க வில்லையே...

crown said...

அபுஇபுறாஹீம் said...
தேர்ந்தெடுத்து இட்டிருக்கும் படம் தலைப்பில் அருமையான படம் கவிதைக்கு கவிதை... குப்புற படுத்திருப்பவளை நான் கவனிக்க வில்லையே.
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். குப்புற படுத்தவளை இதயத்தைவிட்டு அப்புறபடுத்தமுடியாது.(அப்புறம் நம்மை படுத்திவிடுவாள்)அவள் குப்பறபடுத்தும், நிமிர்ந்து உட்கார்ந்தும் இன்னும் பல நிலையில் நம் உள்ளவீட்டில் குடிபுகுந்து ஆட்சி செய்பவள்( நம்மவளை எப்படியெல்லாம் தாஜா(கூஜாதூக்கவேண்டியிருக்கு)செய்யவேண்டியிருக்கு.சில நேரம் அவளும் வலையை நோக்குவதால்.

sabeer.abushahruk said...

இப்புறம் மட்டும்தான் இப்படி என்று நினைத்தேன், அப்புறமும் அப்படித்தானா? ஹவுஸுக்கு ஹவுஸு என்ட்டரென்ஸ் படி!

Post a Comment

உமர் தமிழ்