Tuesday, January 11, 2011

அறிந்தது

தேன்துளி Then Thuli 10:53 PM

                                                 அறிந்தது



 ஜாகிர் ஹுசைன்

  சமீபத்தில் டாக்டர் கே வி எஸ் ஹபீப் முஹம்மது அவர்களின் வீடியோ [ மானுட வசந்தம்]பார்க்கும்போது அறிந்தது.அதில் ஒரு கிருஸ்தவ நண்பர் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
                                       
கேள்வி: உங்கள் இஸ்லாத்தில் ஒரே இறைவன் என்று சொல்கிறீர்கள். யாரையும் வணங்குவது தவறு என்று சொல்கிறீர்கள்
[ அல்லாஹ்வைத்தவிற], ஏன் சில முஸ்லீம்கள் தர்காவுக்கு போய் சில வணக்கங்கள் செய்கிறார்கள்.?

Dr. K.V.S. Habeeb Mohamed பதில்:    இது ஏன்? என்று கேட்டால் அறியாமை என்றுதான் சொல்வேன். சரியாக மாக்கத்தை விளங்கிக்கொள்ளாததால் வந்த பழக்கம் என நினைக்கிறேன். சரி இதற்க்கு தீர்வு என்னவென்று பார்ப்பதுதான் முறை; இதில் அனுகுமுறை எப்படி இருக்க வேண்டுமென்றால் ஒரு டாக்டர் நோயாளியிடம் காட்டும் அனுகுமுறை முக்கியம். நோய் மீது கோபம் வரலாம்
ஆனால் நோயாளி மீது கோபம் வரக்கூடாது. நம் ஆட்களின் பிரச்சினை என்னெவென்றால் நோயாளியிடம் கோபப்படுவது [answer complete]
" இவன் ஏன் இப்படி செய்கிரான்/..எப்படி செய்யப்போச்சு?' இது முக்கியமில்லை ..உனக்கு மார்க்கம் தெரியுமல்லவா.. எடுத்து சொல்...எது வரை எடுத்து சொல்வது..அவன் கற்றுக்கொள்ளும் வரை...பொறுமைதானே வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம்.
நமது நபி முஹம்மது [ஸல்] அவர்கள் கற்றுத்தந்தது
அன்புதானே..ஆதிக்கம் இல்லையே.


கல்வி விழிப்புணர்வு மாநாடு

கல்வி விழிப்புணர்வு மாநாடு நடக்க இன்னும் சில தினங்கள் இருக்கிறது. இதுவரை நேரில் பார்த்திராத எத்தனையோ சகோதரர்கள் இதில் ஈடுபட்டு இறைவன் உதவியால் ஒரு நல்ல விசயத்தை ஊரில் உள்ள மாணவர்களுக்கு செய்ய இருக்கிறார்கள். தடைகள் இருக்கும் , விமர்சனமும் இருக்கும், நாம் நினைத்தது மாதிரி அவர் நினக்கவில்லை என்று வருத்தப்பட்டு மனம் சோரக்கூடாது.

“வருத்தகூட்டம்” எல்லாம் போடக்கூடாது. அப்படி உங்களைப்போல் எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்று வருத்தப்பட்டால்..கம்ப்யூட்டரில் எல்லோரும் ஒறெ மாதிரி பேக்ரவுன்டு படம் வைத்து கொள்ளவேண்டும் என்ற ஆசை மாதிரிதான் இதுவும்...இது சாத்தியமே இல்லை . அல்லது உங்களுடைய மூலையின் Memory Zone ஒறே மாதிரி கொண்டு வர சில தொழிற்சாலைகள் முன் வர வேண்டும்...அது இப்போதைய டெக்னாலஜி அவ்வளவு முன்னேற்றம் அடையாததால் இந்த சின்ன சின்ன வருந்தங்களை சில நூறு வருடங்கள் தள்ளிப்போடவும்.

வீடுகள்

இப்போது நமது ஊரில் வீடுகள் கட்டுகிறார்கள்.

..ஆனால் பல வருடங்களாக ஒறே மாதிரி ப்ளான் வைத்து கட்டுவதுபோல் உள்ளது தவிர்க்க முடியாததா?...கோடையில் மழை குறைவு எனத்தெரிந்தும் மழை நீர் சேகரிப்புக்காக எந்த ஏற்பாடும் செய்வதுபோல் தெரியவில்லை. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பேனல்கள் 26 ஆயிரம் ரூபாய் அளவு குறைந்தும் யாரும் அதை வாங்கி பயன்படுத்துவதுபோல் தெரிய வில்லை. இதில் பெருமளவு பணம் மிச்சப்படுத்த முடியும். வீடுகளில் வெளிச்சம் வருகிற மாதிரி வீடு கட்டாமல் ஒவ்வொரு மாதமும் எலக்ட்ரிக் பில் கட்டுவதில் பெரும் பணம் இழக்கிறோம். இப்பொது உள்ள வீடுகளின் மாதிரி டிசைன்ஸ் உங்கள் பார்வைக்கு..
.
ZAKIR HUSSAIN

LABEL:-

1 comments:

sabeer.abushahruk said...

captain, what's happening?

Post a Comment

உமர் தமிழ்