1979 நண்பர்கள் ஹாஜா இஸ்மாயில். சபீர்அஹமது. ஜாகிர் ஹுசைன், ரியாஸ் அஹமது, ஆஷிக் அஹமது, இவர்களின் வாழ்வில் ஒரு பொண்ணான வருடம், காரணம்; என்னவெனில்...நண்பர்கள் ஒன்றாக இவ்வருடத்தில் இணைந்து "தேன் துளி" என்ற கையெழுத்து பத்திரிக்கையை தொடங்கினார்கள்... ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் பதினைந்து பிரதிகளை (அந்த நேரத்தில் ஜெராக்ஸ் வசதி நமது ஏரியாவிலேயே இருததில்லை) தயார் செய்து, அதை அதிரை மெயின் ரோட்டில் அந்நாட்களில் பிரபலமான எம்.பி ஸ்டோர் மூலம் விற்பனை செய்தார்கள். அதன் அப்போதைய விலை 25 காசுகள்!!. அதில் சபீர் எழுதிய கவிதைகள் மிகவும் பிரபலமானது, ஜாகிர் எழுதிய எல்லா கதைகளும் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது ,காரணம் அவை பிரபல எழுதாளர் "சுஜாதா" அவர்களின் நடயை ஒத்துருந்தது. ரியாஸ் எழுதிய கதைகளும், வரைந்த படங்களும் மிக அருமை, ஆஷிக் எழுதிய கதைகளும் ஓ. கே.!!
அதிலும் நடுபக்கத்தில் இடம்பெற்ற கேப்டன் ஹெச்சை தோன்றும் "கடலின் மர்மம்" என்ற சித்திர கதை (காமிக்ஸ்)இன்றும் மலரும் நினைவுகளாய் உள்ளது.! .ஒன்றை போல 15 பிரதிகளை தயார் செய்ய .நண்பர்கள் மிகவும் சிரமப்படவேண்டி இருந்தது,. நண்பர்கள் எழுதி எழுதி கை வேதனைபட்டனர்..
ஹாஜா 15 பிரதிகளிலும் தொடர்ந்து ஒரேமாதிரி படம் (காமிக்ஸ்) போட்டதால் கண்ணில் அன்று ஏற்பட்ட பிரச்சினை இன்றுவரை தீரவில்லை,
எந்தவித நவீன வசதிகளும் இல்லாத கால கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு பெரும்முயற்சி செய்து நிறுவப்பட்ட அன்றைய "தேன் துளி" இன்றைக்கு வலைபூவாக சுமார் முப்பது ௦ வருட இடைவெளிக்குப்பிறகு இணைய தளத்தில் வெளி வருகிறது..
இதில் கதை, கவிதை, கட்டுரைகளும், உலக செய்திகளும்,. இஸ்லாமிய சிந்தனை செய்திகளும், இன்ஷாஅல்லாஹ் இடம்பெறும், ஊர் பிரச்சினைகளும் விவாதிக்கப்படுவதுடன், காலத்திற்கு ஏற்ப மாற்றங்களும் செய்யப்படும். இதில் வேறுபாடுகள் இல்லாது எல்லோருடைய நல்ல ஆக்கங்களும். வெளி இடப்படும் அதிரை நண்பர்கள் அனைவரும் படித்து பயன் பெறுவதுடன், தங்களின் நல்ல கருத்துகளையும் ஆலோசனைகளையும், தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு அன்புடன்,
தேன் துளி ஆசிரியர் குழு
----------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------
LABEL:-
farook
5 comments:
வாழ்த்துக்கள் காக்காமார்களா
சலாம்
ஹாஜா தொடக்கம் அருமை தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அழைக்கும்
தேன் துளி
வரவு மனதில் இனிப்பை விதைத்தது.
அந்த காலத்தில் இந்த புஸ்தகங்களை ஹாஜ இஸ்மாயில் காகா அவர்களிடம் 5 பைசா கொடுத்து வாடகைக்கு வாங்கி படித்த வாசகர்களில் நானும் ஒருவன் என்பதை நினைத்தால் மனதில் தேனாக இனிக்கின்றது.
தேன் துளிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
மேன் மேலும் இணையக்கடலில் கை எழுத்துப் பத்திக்கை 'தேன் துளி' மிதந்து நம் எல்லோரையும் புத்துணர்வுடன் இருக்க செய்யும் என்று நம்புகிறோம்.
வெற்றிக் கூட்டனி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
கேப்டன் ஹெச் ஐ,
இனி எந்த கட்டத்துக்குள் எதை வைக்கவேண்டுமோ அப்படி மாற்றி அமைத்துக்கொள். நமக்கு ஐந்து கட்டங்களாவது வேண்டும். ஒன்று இஸ்லாமிய ஆக்கங்களுக்கு, ஒன்று கட்டுரைகளுக்கு, ஒன்று காமிக்சுக்கு, ஒன்ரு கவிதைகளுக்கு, ஒன்று மற்றவை மற்றும் மற்றவர்களின் ஆக்கங்களுக்கு. சரியா?
Post a Comment