Friday, April 29, 2011

ஒரு பேட்டி..

ZAKIR HUSSAIN 7:57 PM

ஒரு பேட்டி...

ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் M.A. B.Sc. B.T அவர்கள்..

இப்போது இணைய தளத்தில் அதிகம் கலக்கிக்கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டை பொருத்தவரை அதிராம்பட்டினத்தை சார்ந்தவர்களாகத்தான் இருக்கமுடியும். இருப்பினும் இவர்களின் கல்விக்கு ஆரம்ப காலத்தில் பொறுப்புடன் செயலாற்றிய பல ஆசிரியர்கள் இப்போது ஒய்வு பெற்று விட்டார்கள்.

அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என நினைவு வந்தவுடன் எனக்கு கிடைத்த டெலிபோன் நம்பரில் தொடர்பில் கிடைத்த ஆசிரியர் SKM H என்று நான் படிக்கும் காலங்களில் அன்புடன் அழைக்கப்பட்ட ஹாஜா முஹைதீன் சார். நானும் அவரின் பழைய மாணவன் ஆதலால் சில நல விசாரிப்புகளுக்கு பிறகு...

உங்கள் மாணவப்பருவம், பள்ளியில் சேர்ந்து பணியாற்றியது பற்றி...

பள்ளிப்பருவம் எல்லாம் காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளிதான் [ அப்போது உயர்நிலை மட்டும் தான்] பிறகு பி.யு. சி எல்லாம் Kadhir Mohideen college , 3 வருடம் ஆசிரியராக பணியாற்றிய பிறகு புதுக்கோட்டை அரசினர் ஆசிரியர் பயிற்ச்சி கல்லூரியில் B.T படிப்பு முடித்து, 8- 9 வருடம் ஹையர் செக்டரி ஆசிரியர் ஆகி 1986ல் தலைமை ஆசிரியர் பொறுப்பு ...பிறகு 31- 05- 1998 ல் ஓய்வு பெற்றேன்...

ஒரு மிகப்பெரிய பணியை இவ்வளவு சிம்பிளாக சொன்னது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது..இடைப்பட்ட காலங்களில் எத்தனை நிகழ்வுகள் எத்தனை ஏமாற்றம் , எத்தனை வெற்றி எதையும் ஒரே மாதிரி பார்க்கும் மனப்பக்குவம் சாரின் வார்த்தைகளில் தெரிந்தது.

இப்போது உங்களது வேலை பற்றி...

1998 செப்டம்பரிலிருந்து IMAM SHAFI MATRIC HIGHER SECONDARY SCHOOL, ஏறக்குறைய 70 Teachers, 30 பேர் கொண்ட Non Teaching Satff, உதவியுடன் 1600 மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது.

மறக்கமுடியாத நிகழ்வுகள், மாணவர்கள் பற்றி...

நிறைய இருக்கிறது,நிறைய மாணவர்களும் இருக்கிறார்கள். மாணவர்கள் பெயர் எல்லாம் ஞாபகத்துக்கு வரவில்லை..என் வயதும் அதற்க்கு ஒரு காரணமாக இருக்களாம். நாடகம் விளையாட்டு என்று எனக்கு ஆர்வம் இருந்ததால் சில மாணவர்கள் எனக்கு ஞாபகம் இப்போதைக்கு வருகிறது.நாடகங்களில் பங்கேற்ற ஜாபர், அஸ்ரப், சிராஜுதின், நூர்முஹம்மது, விளையாட்டில் சிறப்பாக இருந்த அல் அமீன். உன் பெயரில் இன்னொரு மாணவன் இருந்தான் [ அவனும் ஜாஹிர் ஹுசேன் தான்.. உனக்கு ஜூனியராக இருக்க வேண்டும்.]

நினைவில் நிற்க்கும் நிகழ்வுகளில் என் ஆசிரியர் பணியையே சொல்லலாம்...நான் படித்தது நாடிமுத்து சார், ரெங்கராஜ் சார், நாகரத்தினம் சார்..இந்த மூவரிடமும். பின் அவர்களோடு சேர்ந்து ஒன்றாக பணியாற்றியது, பிறகு நான் தலைமை ஆசிரியர் ஆகும்போது அவர்களும் என்னுடன் பணியாற்றியது. இது இன்னால் வரை எனக்கு அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

இன்னும் ஒன்று ஒருமுறை பக்கத்து ஊரில் தேர்தல் தலைமை அதிகாரியாக போயிருக்கும்போது [அசம்ப்ளி எலக்சன்] ஒரு P.E.T ஆசிரியர் என்னைவிட மூத்தவர் [ வேலை/வயது இரண்டிலும்] என்னைப்பார்த்து சொன்னது எப்படி சார் நீங்கள் ஒரு P.E.T , ஆனால் என்னை விட வயதிலும் , சர்வீசிலும் குறைந்தவர் எப்படி எனக்கு தேர்தல் அதிகாரியாக அரசு நியமித்து இருக்கிறது.??

உடனே நான் சொன்னேன் ' சார் முதலில் ஒரு உண்மை..நான் P.E.T அல்ல , கிராஜுவேட் முடித்து , தலைமை ஆசிரியாக இருப்பதுடன் ஒரு Mathematics Teacher. நான் விளையாட்டின் மீதான ஆர்வத்தில் மாணவர்களுடன் District/ Divisional Sports போவதை பார்த்து என்னை P.E.T ஆக நினைத்து விட்டார்.’

இல்லை சார் இன்றும் ஸ்லிம் ஆக இருக்கும் உங்கள் உடல்வாகு பார்த்து அவர் முடிவு செய்து இருக்களாம்..- இது நான்

ஒரு முறை District Education Officer ஆக இருந்த ஒருவருடன் இலக்கிய மேடையில் பேசிய பிறகு, அடுத்த நாள்அவர் நமது ஸ்கூலுக்கு வந்த போது நான் கணக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் போது 'நீங்கள் ஏன் கணக்கு பாடம் எடுக்கிறீர்கள்?...போய் கணக்கு ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றவுடன்..சார் நான் கணக்கு ஆசிரியர்தான் என விளக்கம் சொல்லவேண்டியிருந்தது.

முன்னால் / இந்நாள் மாணவர்கள் ஒரு ஒப்பீடு……..

' அப்போது இருந்த மாணவர்களிடம் இருந்த obedience இப்போது பார்ப்பது அறிதாகிவிட்டது.. அதற்க்கு காரணம் சூழ்நிலைகள், சட்டம் எல்லாம்தான். மாணவர்களை அடித்துத்தான் திருத்த வேண்டும் என்று இல்லை நாம் அவனிடம் அன்பாக ஒரு 10 நிமிடம் பேசினாலும் அவனது தவற்றை உணர வைத்து விடலாம். முன்பு ஒரு ஆசிரியரிடம் கோபமாக நடந்த மாணவனை எனது அன்பால் திருத்திய 2 நிகழ்வுகள் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

தமிழ் , இலக்கியம் மற்றும் நாடகம் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

' உண்மையிலேயே நான் தமிழ் இலக்கியம் படிக்க பச்சையப்பன் கல்லூரிக்கு அப்ளிகேசன் போட்டு இடம் எல்லாம் கிடைத்து விட்டது , அப்போது டாக்டர் மு.வரதராசன், பேராசிரியர் அன்பழகன் எல்லோரும் அங்கு பேராசிரியராக பணீயாற்றிய காலம்...அப்போது உள்ள குடும்ப பொருளாதார சூழ்நிலையில் நான் மெட்ராஸ் போய் படிக்க முடியவில்லை.

நான் ஆசிரியர் பணியில் இருக்கும் போது பள்ளி மாணவர்களை, அகில இந்திய வானொளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்தேன் அதில் நான் எழுதி மிகப் பிரபலமான இரண்டு நாடகங்கள் மாவிரன் அலெக்சாண்டர், மாவீரன் திப்பு சுல்தான், அறிவியல் நிகழ்ச்சிகள் ஆறு முறையும் மற்றும் வினாடிவினா நிகழ்ச்சி மூன்று முறையும் எழுதி இயக்கியிருக்கிறேன்.

உங்கள் குடும்பம் பற்றி..

2 மகன்கள், 1 மகள் எல்லோருக்கும் கல்யாணமாகிவிட்டது... நானும் 2002 ல் குடும்பத்துடன் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டேன். நீ எப்படிப்பா இருக்கே..உனக்கு எத்தனை பிள்ளைங்க...உன் வாப்பா சவுக்கியாமா..என் சலாத்தை அவர்களுக்கு சொல்லிவிடு...

காலங்கள் எவ்வளவு கடந்தாலும் சாரின் அன்பான விசாரிப்பில் நான் நெகிழ்ந்துதான் போனேன்.

ZAKIR HUSSAIN

நன்றி: சகோதரர்கள் மொய்னுத்தீன் உமர்தம்பி / அபு இபுறாஹிம்

Saturday, April 2, 2011

மனமே தொட்டாசினுங்கிதானே.....

தேன்துளி Then Thuli 11:59 PM




மனமே
தொட்டாசினுங்கிதானே.....
தொதொட்டாசினுங்கிதானே.....ட்டாசினுங்கிதானே.....
தொட்தொட்டாசினுங்கிதானே.....டாசினுங்கிதானே.....
'மனசு"ன்னு ஒன்னு இல்லாட்டா எப்படி இந்த உலகம் இருக்கும் நினைக்க ரொம்ப ரோபோட்டிக்கா போயிருக்கும்ல?..

...

எந்த கண்டுபிடிப்பும் இருக்காது, குழந்தைகள் தொழிற்சாலையில் செய்யப்படும் பொருள் மாதிரி மதிக்கப்படும். பிச்சைக்காரர்கள் தட்டில் காசு இருக்காது. கவிஞர்கள், இலக்கியம் சிலாகிப்பவர்கள் வழக்கொழிந்து போவார்கள். நானும் இதை எழுத மாட்டேன்.. நீங்களும் படிக்க போவதில்லை.

எல்லா கண்டுபிடிப்பும், வாழ்வியல் ரசனையும், எதையும் அசைபோட்டுசந்தோசப்படும் மனசைத்தான் நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பதின் மீள்பார்வை இந்த ஆர்டிக்கிள் எழுத ஏற்படுத்திய சின்ன வெளிச்சம்.

நாளைக்கு உள்ள பிரச்சினைகளை அல்லது வேலையை டென்சனோடு அணுகும் மனப்பான்மை உள்ளவரா நீங்கள்... கவனிக்க உங்கள் மனது மட்டுமல்ல உடம்பும் ஒரு கான்ஸ்டான்ட் டென்சனில் இருந்து சுரக்க வேண்டிய சில அமிலங்களை அளவுக்கு அதிகமாக சுரந்து உங்கள் பணத்தில் கணிசமான அளவு கரந்து டாக்டரிடம் கொடுத்துவிடும். [அமிலம்னா ஏதோ வெஸ்டர்ன் யூனியன் மாதிரி எழுதியிருக்கேனு நினைக்க தோன்றினால்.. பொறுமைகாக்க].

மனிதனின் மனசு எப்படி மாறுகிறது...ப்படி அது ஒருசின்ன மூட்” மாற்றம் ஏற்படுத்துகிறது அதனால ஏற்படும் கெமிக்கல் ரியாக்சன் என்ன உடம்பில் எழுத ஆரம்பித்தால் மக்கள் தொலைக் காட்சியின் மருத்துவ நேரம் மாதிரி ஆகிவிடும்.



மனதை சரியாக பயன்படுத்துவதில் தவறு ஏற்படும் தருணம்தான் உலகில் முதன் முதலில் துரோகம், பொய், ஏமாற்று வேலை எல்லாம் உருவானது. இதில் எல்லாமதமும் சொல்லும் விசயம் கர்மவிதி..நாம் செய்த நல்லவைகளுக்கும் கெட்டவைகளுக்கும் சரியான விதமாக தண்டனையோ அல்லது நன்மையோ கிடைக்கும்.. இது பொது விதி.

நான் சந்த்தித்த சிலரின் பிரச்சினைகள் வித்யாசமானவை, அதிலும் அவர்கள் அதை ஞாயப்படுத்த அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் வித்யாசமானவை.



ஒருவர் தனது மனைவியுடன் சண்டை பல வருடம் பேசவில்லை, சொல்லும் காரணம் எல்லாம் " என்னை மதிக்கவில்லை... நான் டீ கேட்டபோது உடனே தரவில்லை, என் பெற்றோரிடம் சரியான உறவு இல்லை, டீசன்சி பத்தாது, எனது கஸ்டத்தில் அவளின் வீட்டிலிருந்து பண உதவி செய்யவில்ல.... இப்படி அடிக்கினார்.

இதற்கும் மனசுதான் காரணம் நம் பெற்றோர்கள் நமக்கு நல்லவர்கள் தான் அதை அப்படியே மற்றவர்களும்உங்கள் மனைவியும் ]ஆமோதிக்க வேண்டும் என்பது ஒரு பிடிவாதம் தான். அப்படி என்றால் உலகில் எல்லோரும் நல்லவர்கள்தானே.. உலகம் நல்லவர்கள் மட்டும் வாழும் இடமா? அது முடியுமா? [


மனசுபிடிவாதம்” எனும் ஆயுதம் ஏந்தியதால் அவர் இழந்தது அவரது இளமைக் காலம் முழுவதையும்... இனிமேல் அந்த காலம் திரும்பிவரப் போவதில்லை,

உங்களின் ரிட்டயர்மென்ட் வாழ்க்கையில் உங்களோடு அதிகம் வாழ சாத்தியம் உள்ள உங்கள் மனைவியுடன் என்ன பேசப்போகிறீர்கள்?.. அமைதியாக உட்கார்ந்து பேச உங்கள் வாழ்க்கையில் சம்பவங்களே இல்லையே?? பிள்ளைங்க அவங்க வேலை, குடும்பம்னு ஆயிடும்ல.. ஏறக்குறைய உங்கள் வாழ்க்கை ஆடியோ சரியாக ரெக்கார்ட் ஆகாத , கீறல் விழுந்த பிளாக் & ஒயிட்படம் மாதிரிதான் இருக்கும்” என நான் சொன்னவுடன்... தப்பு செஞ்சுட்டேன்னு கண் கலங்கினார்

மனசு முழுக்க பிடிவாதமும், எனக்கு, நான் என்று ஆக வாழும் மனிதர்கள் தொடர்ந்து ஏழ்மையில் இருந்து கொண்டு பணக்காரன் ஆக ஆசைப்படுவது லைசன்ஸ் இல்லாத சாஃப்ட் வேர் வாங்கி அப்ட்டேட் செய்ய ஆசைப்படுவது மாதிரி.

சிலரின் மனதில் மதம் குடிகொண்டு மார்க்கம் வெகேட் செய்து போயிருக்கும். இவர்களிடம் என்ன நல்லது சொன்னாலும் கொரலிவித்தைக்காரன் திருப்பி திருப்பி ஒரே விசயத்தை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் எது சொன்னாலும் தனது விவாதத்தில் ஜெயிக்க பார்த்து , கல்யாணப் பத்திரிக்கையிலுள்ள "சுற்றமும் நட்பும்" எல்லோரிடமும் சண்டை போட்டிருப்பார்கள். இவர்களும் மற்றவன் என்ன சொல்கிறான் என்பதை பகுத்துஅறியும் மனது இருந்தால் பிரச்சினை இல்லை. இவர்களில் நாக்கில் 'அமெரிக்கன் கெட்டவன்' என்ற போர்டு நிறந்தரமாக தொங்கும்.

இதில் சில பெண்களும் விதி விலக்கல்ல சில சமயங்களில் பொறுமை காக்கதவறுவதும்.. மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஆன்டென்னா இவர்களுக்கு சரியாக சிக்னல் அனுப்பிக் கொண்டே இருப்பதால் வாழ்க்கை எனும் மெயின்பிக்சரை தவற விடுவதும் உண்டு. கணவனுக்கு பிடிக்காததை செய்வதன் மூலம் தனது சுதந்திரம் காக்கப்படுவதாக ஒருமனமுடக்க’த்தில் இருப்பவர்கள். அப்படியே இவர்களுக்குசிலபஸ்’ சரியாக விளங்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது டெலிவஷன் சீரியல் எனும் பயிற்சி பட்டறை.


ஜிம்னாசியம் போன்ற இடங்களில் உடற்பயிற்சி கொடுப்பது மாதிரி மனப்பயிற்சி ஏதும் மலிவாக கிடைப்பதில்லை. உடல் பயிற்சி செய்யவும் ஒரு ஸ்ட்ராங்கான மனப்பயிற்சி தேவை, அதனால் தான் த்ரெட் மில் வாங்கி சில வீடுகளில் அது பயன்படுத்தபடாமல் டவல், ஜட்டி எல்லாம் அதன் கைப்பிடியில் காயப்போட்டு வைத்திருப்பார்கள். அதில் ஒருவர் 'அதுலெ போட்டாத்தான் நல்லா காயுது' என்றார்.



 




மனப்பயிற்சியின் சில டெக்னிக்ஸ்:
மனம் அலைபாய்வதை அளக்கும் கருவியாக கண்ணை சொல்கிறார்கள். ஒரு நிலையில் இல்லாத மனம் உள்ளவன் கண் தொடர்ந்து உங்களைப் பார்த்து பேசாது. சுழலும்... அவனை ஒரு முகப்படுத்த ஒரு அரை மணி நேரம் சுவற்றுக்கு முன்னால் 1/2 மீட்டர் இடைவெளியில் உட்கார வைத்து மன ஓட்டத்தை கவனிக்க சொல்வார்கள். மொத்தத்தில் இது நம்மை நாம் கண்ணாடியில் பார்ப்பதற்கு சமம்.

இந்த பயிற்சியில் "சும்மா' உட்கார்ந்திருந்தாலும் உடம்பு வலிக்கும்.
ஜிப்ரைஸ் டெக்னிக் என்று ஒரு ரஷ்யன் டெக்னிக் உண்டு ...ஒரு பெரிய ரூமில் உங்களை தனியாக விட்டு உங்களை மனம் போன போக்கில் கத்த / பேச சொல்வார்கள். ஒரு 15 நிமிடத்துக்கு பிறகு உங்கள் மனதில் மிகப் பெரிய வெற்றிடம் தோன்றுவதை உணரலாம்.

வாழ்க்கையில் அதிக ஒட்டுதல் [State Of Attachments] நிறைந்த மனம் தொடர்ந்து சோதனைகளை சந்திக்கும், பிரச்சினைகளை தன்னுடன் ஒட்டாமல் பார்க்கும் பக்குவம் [ State of Detachment] மனிதனை மகானாக வளர்ச்சி அடைய செய்கிறது, இதை புரிந்து கொள்ளும் சூழல் புத்தகத்திலிருந்தோ , அல்லது வலைப்பூவிலோ கிடைக்காது.

மனத்தின் மீதான விசயங்களில் கவனம் செலுத்தும்போது Metaphysics / Quantum physics போன்ற விசயங்களில் ஆர்வம் தோன்றும் இது அனைத்தும் முஸ்லீமாக இருப்பவர்களுக்கு மார்க்கத்தின் மீதான நெருக்கத்தையும் அதிகப்படுத்தும். இந்தசமாச்சாரங்கள் இன்னும் ஆழமாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கம்போல்இவன் எந்த குரூப் ஆலு” எனபார்ப்பதில் ஆர்வம் இருப்பதால் மெயின் சப்ஜெக்டை கோட்டைவிட்டு விடுபவர்கள் அதிகம்.


மற்றும்…
நீங்கள் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை தவற விட்ட அத்தனை சம்பவங்களிலும் உங்கள் மனதின் வலிமை குறைந்த தருணம்தான்.


- ZAKIR HUSSAIN

LABEL:-

என் சாய்வு நாற்காலியிலிருந்து...!

தேன்துளி Then Thuli 11:04 PM

என் சாய்வு நாற்காலியிலிருந்து...!
            (சிற்சில வாழ்வியல் உணர்வுகளின் தொகுப்புத் தொடர்..1.)

 

                                                                                  


கதவு தட்டப்படுகிறது!
யாரது...
தட்டி அழைப்பது?
என் விடிகாலை கனவை                          
வெட்டி அழிப்பது?                                    

என்னை அழைத்தா -என்
பெண்ணை அழைத்தா -அவள்
அண்ணை அழைத்தா - அல்லது
அண்ணன் அழைத்தா?

ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல
அவசரக்காரனுக்கும்
புத்தி மட்டுதான் -
அன்றேல்...
அடித்து அழைக்காமல்
அழைப்பு மனியை
அழுத்தி அழைத்திருப்பான்.

இவ் விடியற்காலையில்
இத்தனை சப்தமாய்
இம்சிப்பது யார்?

மூளைக்குச் சொல்லி
முனக வைக்கும் பொறுமையின்றி
முழங்கால் வாய் முளைத்து
முழங்கிய மூட்டுவலி
சற்று நேர முன்புதான்
நித்திரை தொட்டது.

ஓடியாடி ஓயுமுன்
ஒத்திகையாய்
உழைப்பிலிருந்து ஓய்வு பெற்று
உள்ளரையில் ஒதுங்கிய
என்
உறக்கம் களைப்பது
யாரது?

கதவு தட்டப்படுகிறது...                                       


தொடரும்...


Sabeer Ahamed

LABEL:-

JAM -JIM -JACK, BY HAJA ISMAIL.

தேன்துளி Then Thuli 10:00 PM

 

JAM -JIM -JACK.






1976 A Golden year for Mr. Mullai Thangarasan. In that year he created his very famous characters like  JAM -JIM-JACK, Minnal Mayavi, Irumbukkai Maya Mayavan, C.I.D.Karthi.

  
   


On those days he joined hands with President of ‘Mathi Nilayam’, Mr. S. Subramaniyam (Valarmathi) and published JIM JAM JACK series first story “Parai Theevu Marmam” with “Mahean” Art for 50 Paise and that too in double colour.



When he said about this character “Jambulingam," a young genius, whose aim is to become a detective specialist. He was grown-up by his Aunt as he lost his parents in his childhood. “Jackayya "is his assistant and Jimmy is his pet dog. His first story has started in this way only. One day Jambulingam announced his name as “Jam” his assistant Jackayya as “Jack” and his pet dog as “Jim”. He also claimed in the press meet arranged later that he is going to investigate a Paris bank looting.



In this condition, a well dressed man, Flum who came to Jam’s house told Jam that he wants to investigate Paris bank looting and he wanted to take Jam with him in a private flight and he took Jam & co with him by telling that French president sent a flight for them.

When the flight was in the middle of the sky, that mysterious man claimed that their gang (Sarvathesa Sathikararhal Sangam) has looted the bank and as per their head quarters instruction, they want to eliminate Jam then he jumped into parachute before the flight to reach Blue Sea. Flight started getting dismantled as part by part. Jam & Co escaped with the Parachute as they took with them by pre-plan and reached a small island covered by rocks (Paraitheevu). They have captured surprisingly all the gangsters hidden there and handed over them to police. He imprinted the interest in every page turned and Mullai Thangarasan’s story styles adding the shining to the story.











In 1977, Mullai Thangarasan published four comics through VIJI Art Publications in series of JAM JIM JACK for just 60 Paise. This time the artist was great Mr. Chellam alias Chellappan. Thus Mullai Thangarasan’s every story was then supported by Chellam’s Art and which attracted all the comics fans.


Here I write about the two comics I have….


1. Pakal Kollaiyar:




When Jam let the plane to fly which was sent by his friend from America, got exploded due to the sudden whirl wind and fallen on the Star Jinning Factory. Jam who went in the night to rescue the plane and found some gangsters printing duplicate postal stamps. When the gang leader trying to shoot Jam who was caught by them was captured by police after Jam’s adventures.







  




2. Sadikararkal Valaiyil Jaam:









As for this comics Jimmy was the Hero. Several VIP’s had to get imprisoned since the Paris Bank looting was investigated by Jam and few international terror elements got furious over this and planned to kill Jam. The perpetrators make Jam unconscious and kidnap him inside Bureau. Untried JIM following the perpetrators saving Jam by adventures and get them captured by police.




In continuation to this, Mullai Thangarasan in 1978 in Ratna comics and in 1979 in Ratna Bala, he took over the charge as a writer.






When he worked in Ratna Bala, he published JAM JIM JACK’s comics in middle pages and one comics in a month. He also published new Jam Jim Jack in Ratna Bala. Out of this JAM JIM JACK appearing KAANAkA KALLARkAL, Villain "Flum" appears as leader of Gang killing elephants for ivory.




After some time he quite Ratna Bala and joined Anil Publication in Sivakasi as an editor of their children’s magazine, Manipappa. In this too, he published JAM JIM JACK stories and important point to note here is, the Manipappa is last book he worked for. The first story was “Paraitheevu marmam”, he published this again with Mr. Chellam’s art.










During his tenure in Ratna comics, Ratna Bala, Manipappa, he published lots of magic stories. His history in the tamil comics is an indelible one.
 அன்புடன்
ஹாஜா இஸ்மாயில் எம்.

//////////////////////////////////////////////////////////////////////

LABEL:-

போனாபோவுது வாங்க தொடர் ...2

தேன்துளி Then Thuli 9:21 PM



போனாபோவுது வாங்க 





நம்பிக்கை கொண்டோரே...(அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக நோன்பு  உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்க பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட காலம் அது கடமையாக்க பட்டுள்ளது. (2:183)

வைகறையிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல் பருகாமல் குடும்ப வாழ்வில் ஈடுபடாமல் இருப்பது நோன்பு.

இஸ்லாமிய மார்க்கம் இறைவனால் மனித குலத்திற்கு தரப்பட்ட அறிவு சார்ந்த வாழ்க்கை வழி முறையாகும். படைப்பினங்களில் மிக சிறந்த சிந்தனை செய்யும் படைப்பாக மனிதனை படைத்து பகுத்தறியும் அறிவையும் கொடுத்து நேர் வழியும் காட்டியிருக்கிறான். நேர் வழி தெரிந்த பின் அவ்வழி நடப்பவருக்கு வெகுமதியாக சொர்க்கத்தை தருகிறான். அங்கே மரணம் என்பதேயில்லை மண சந்தோசத்திற்கு அளவேயில்லை அதை விட்டு வேறு எங்கும் செல்ல மணம் நாடுவதுமில்லை.
 
ரசூல் (ஸல்) கூறினார்கள் : எவர் ரமழானில் ஈமானுடனும் உண்மையான உள்ளச்சத்துடனும் நன்மையை நாடியவர்களாக நோன்பு நோற்று இறைவனிடம் தொளபாச் செய்து பாவ மன்னிப்புத் தேடுகிறாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
மேலும் கூறினார்கள் "ஆதமுடைய மகனின் எல்லாச் செயல்களும் அவனுக்குறியதே அவற்றில் ஒவ்வொன்றிற்கும் நன்மை பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை உள்ளன. நோன்பைத்தவிர, ஏனெனில் நிச்சயமாக அந் நோன்பு எனக்குறியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் அவன் தனது மனோ இச்சை, உணவு, ஆகியவற்றை எனக்காகவே விட்டு விட்டான் என அல்லாஹ் கூறுகிறான்."(தொழுகை ஜகாத் ஹஜ் போன்ற செயல்கள் பிறர் பார்க்கும் படி செய்ய வேண்டியிருக்கிறது நோன்பு அவ்வாறல்ல நோன்பாளியை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்)  நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன. ஒரு சந்தோசம் அவன் நோன்பு திறக்கும் நேரம். மற்றொன்று அவன் தன் நாயனைச் சந்திக்கும் நேரம். அல்லாஹ்விடம் நோன்பாளியின் வாயின் வாடை கஸ்தூரி வாடையை விட நறுமணம் மிக்கதாகும்

நன்மைகளை அள்ளி தர கூடி சிறப்பு மிக்க ரமலான் மாததிலும்  அனிச்சை செயல் போல் சிலவற்றை செய்கிறோம் அது நண்பர்கள் ஒன்று கூடி இருக்கும் போது அல்லது பலர் ஒன்று கூடி இருக்கும் போது தமாசாக கேலி கிண்டல் என தொடங்கி தேவையற்ற பேச்சுகளில் மூழ்கி ஒருவரை ஒருவர் கீழ் தரமாக பேச கைகலப்பு தொடங்கும் இதில் முக்கியமாக புறம் பேசுதல் இருக்கும் இல்லெனா இரவு தூக்கமே வராது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் 'எவர் (நோன்பு நோற்றிருந்தும் ) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் பற்றி அல்லாஹ்வுக்கு எவ்வித அக்கறையுமில்லை.'  (புகாரி)



சரி இனி நம்முடைய நிலையை பார்ப்போமா?

1. ரமலான் நோன்பை முழுமையாக நோற்றோமா? அல்லது சிலவற்றை விட்டு விட்டோமா?

2. ரமலான் மாதத்தில் நன்மைகளை அதிகம் பெற்றோமா?

3. நோன்பாளியாக இருந்து நோன்பின் பலனை இழந்தோமா?

நம்மிடம் தவறுகள் இருப்பின் திருத்தி கொள்ள முயற்சி செய்வோமே...
 



    ரியாஸ் அஹமது

LABEL:-

உமர் தமிழ்