Showing posts with label zakir Hussain. Show all posts
Showing posts with label zakir Hussain. Show all posts

Saturday, December 18, 2010

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள்- ஜாஹிர் ஹுசைன்

தேன்துளி Then Thuli 12:26 AM

பொதுவாக ஹஜ்பெருநாளை நாம் தியாகத்திருநாள் என அழைக்கிறோம்...நம் வாழ்க்கையிலும் சில நல்ல உள்ளங்கள் மிகப் பெரிய தியாகங்களை செய்திருக்கிறார்கள்.
நமது இன்றைய இளமைக்கும் , வசதிக்கும் அவர்களின் பங்களிப்பும் தியாகமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது வெற்றி பெற்ற பிறகு அதற்க்கு 'நான்"தான் காரணம் என மார்தட்டுபவர்கள் மறவாமல் ஒரு மண்டலம் "மந்துகாபர்னி [வல்லாரை மாத்திரை ] எடுத்துக்கொள்ளலாம். ஒரு மாதிரியான செலக்டிவ் அம்னீசியா , ஞாபக சக்தியின்மை பிரச்சினைகளுக்கு உதவும்.
இந்த ஆர்டிக்கிள் நான் முன்பு எழுதி மற்ற வலைப்பூவில் வெளியானது. இந்த தியாகத்திருநாளில் பொருத்தமாக இருக்குமே என மறுவெளியீடு...

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள்

நான் ஓவ்வொறு முறையும் ஊர்வரும்போது சில பெரியவர்களிடம் "மெனக்கட்டு" போய் பேசிக்கொண்டிருப்பேன், இதை எழுத இது போன்ற நம் ஊர் முதியவர்களின் மெளன அழுகையும் காரணம்.அப்போதெல்லாம் அவர்களின் குறைபடு லிஸ்ட் ரொம்ப நீளமாக இருக்கும். இதன் காரணம்தான் என்ன என்றால் இது பெரும்பாலும் பிரச்சினை possessiveness லிருந்து ஆரம்பித்ததாக இருக்கும்.
இவர்களின் குறை பெரும்பாலும் "பொட்டியோட நேரா பொண்டாட்டி வீட்டுலெ போயி எறங்கிட்டான் வாப்பா' ...இப்படித்தான் இருக்கும். நாம் இப்போது internet உலகத்தில் இருக்கிறோம் , சமயங்களில் "நானோ" டெக்னாலஜி பற்றி பேசுகிறோம், ஆனால் நமது சின்னவயதில் நம்மை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி வாசலில் நின்ற இதுபோன்ற எத்தனையோ உயிர்களின் உள்ளத்தை புரிந்து கொள்ளத்தவறிவிட்டோம்.நம் ஊரில் எல்லோருக்கும் சம்பாதிப்பதின் முக்கியத்துவம் தெரிந்து விட்டது. இந்த நவீன காலத்தின் தாக்கம் [ தாக்கம் தவறல்ல] சில சமயங்களில் நம் கூட இருந்த முதியவ்ர்களை [அப்பா..உம்மும்மா/ராத்தம்மா, வாப்புச்சி உறவுகள்....அல்லது உங்கள் தாயாக கூட இருக்கலாம்] நம்மையும் அறியாமல் ஒதுக்கி விட்டோமா என கேட்கத்தோன்றுகிறது.

மாத வருமானம் ஆயிரம் ரூபாயில் 5 பிள்ளைகளை காப்பாற்றிய தாய் தந்தையருக்கு 10 ஆயிரம் வருமானம் பெரும் ஒரு பிள்ளை ஐநூறு கொடுக்க முடியாததற்க்கு ஆயிரம் காரணம் சொல்கிறது.
இந்த முதியர்களின் புழக்கத்தை அதிகம் போனால் ஒரு 40X50 ல் சுருக்கிவிட்டோம்
பெரும்பாலான பெரியவர்களை நாம் கல்யாணம்/காது குத்து / சுன்னத் மஜ்லீஸ்களில் " வாழ்ந்த மனுசிலெ..அவ்வொ கையாலெ மாலெ போடச்சொல்லுங்க" என்ற வசனத்துக்கு மட்டும் பயன்படுத்துகிறோம். அல்லது நோயில் விழுந்தால் கஞ்சி / மாத்திரை கொடுக்கும்போது மட்டும் பேசுகிறோம்
வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களுக்கு இதுவொரு வேண்டுகோள்..முடித்தால் இவர்களுக்கு நோய்க்கும் / பிணிக்கும் பார்க்கும் அம்பாசிடர்களை அழைக்கும்போது கொஞ்சம் காற்றோற்றமான பகுதியில் கொஞ்சம் நிறுத்தி உலகத்தின் விசாலம் காட்டுங்கள்..முடிந்தால் உங்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் அவர்களின் கேட்டராக்ட் விழுந்த கண்களும், ரத்தம் சுண்டிப்போய் சுருங்கிய விரல்களும் எப்படி ஏணியாய் இருந்தது என்று அவர்கள் காது பட சொல்லுங்கள்.அந்த முதியவர்களை அழைத்துக்கொண்டு குளுமணாலிக்கும்,கொடைக்கானலுக்கும் அழைத்துபோக சொல்லவில்லை. அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்து கடற்கரை, கொஞ்சம் தூரப்போனால் ராஜாமடத்துபாலம் [ அங்கு உட்கார்ந்து அந்தி சாயும் பொழுதை ரசித்துப்பாருங்கள்] ...இப்படி அழைத்துசெல்ல பேரன் இருக்கிறான் / மகன் இருக்கிறான் .என்ற சூழ்நிலை இருந்தாலே இந்த வயதானவர்களின் கடைசிகாலம் கொஞ்சமாவது சந்தோசம் கலந்து இருக்கும்.

"அப்படி ஒன்றும் ஒதுக்கவில்லை அவர்களை" என்ங்கிறீர்களா?..வாழ்துக்கள்...எப்படி
இப்படி வேறுபட்டு அனுசரனையாய் இருக்கிறீர்கள் என்று எழுதுங்கள். வரும் சந்ததியினருக்கு ஒரு reference கிடைக்கும்.
வீட்டுப்பிரச்சினைகளில் இவர்கள் சம்பந்த பட்டிருந்தால் ..தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு பிரச்சினையை விசாரிக்காதீர்கள்.சமயங்களில் காலம் மிகத்தாமதமாக சில விசயங்களை உணர்த்தும்..அது வரை அந்த முதியவர்களும் உயிருடன் இருக்க வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை சந்தோசமாக வைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கிறது.

- Zakir Hussain

LABEL:-

Thursday, December 16, 2010

இன்று 06-12-2010 - ஜாஹிர். ஹுசைன்,

தேன்துளி Then Thuli 1:13 AM


தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கிய. அது என்னவோ தெரியவில்லை... த்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்று வரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு Flash Back

சென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம் சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என் எக்கோலாக் சூட்கேசில் [நியு-காலேஜ் மாணவர்களின் ஸ்டேடஷ் சிம்பள்] தலைவைத்து பெர்த்தில் தூங்கி கொண்டிருக்க... 'லத்தியால் நான் தலைவைத்து தூங்கிகொண்டிருந் பெட்டியில் அடித்து எழுப்பிவிட்டு "வெடிகுண்டு இருக்கானு இந்த ட்ரயினை செக் பண்ரோம்" என அந்த போலீஸ் சொல்ல நானும் இன்ஸ்டேன்ட்டா..' ஆமாய்யா வெடிகுண்டு உள்ள பொட்டியை தலைக்கு வச்சிதான் தூங்குவானுக'... இந்த போலீஸ்தான்ஸ்காட்லாண்ட் யார்ட்????......

ஞாயமான கேள்வி

எதற்க்கெடுத்தாலும் "துவாச்செய்யுங்க அத்தா..துவாச்செய்ங்க..." என சொல்பவர்கள் , எதிரில் நின்று கேட்கும் மனிதர் துவா எதற்க்கு செய்ய வேண்டும் என தெரியாமலேயே போய் விடுகிறார். துவா செய்ய சொன்னவரும் 'அன்றைக்கு சொன்னேனே துவா செஞ்சீங்களா?' என கேட்காமல் ரெக்கார்டெட் மெஸ்ஸேஜ் மாதிரி மற்றவரிடமும் அதை ஒப்பிக்க சென்று விடுகிறார்.

நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்"

ஒரு சின்ன கதை:

ஒரு நல்ல அரசன் ஆளும் இடத்தில் ஒரு துறவி ஊர்க்கோடியில் இருந்தார். அங்கு எல்லா மக்களும் போய் அந்த துறவியிடம் அறிவுரை பெற்று வந்திருக்கின்றனர். அந்த மன்னனுக்கு ஒரு ஆச்சர்யம் துறவி..அதுவும் பிச்சைக்காரன் கோலத்தில் இருப்பவனிடம் ஏன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக போகிறார்கள்?. ஆர்வத்தால் ஆட்களிடம் சொல்லி துறவியை அழைத்துவந்து 'ஏன் உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ? " என கேட்க ..”நாளை சொல்கிறேன்” என துறவி சொல்லி இருக்கிறார். அந்த இரவு அரண்மனையில் தங்க அனுமதியை அரசன் தர...

' நீங்கள் எந்த விதமான அறையில் தங்க ஆசை?..---. அரசன்.

'உன் அறையை விட விசாலமான வசதியான அறையில்...' ---- துறவி

'என்னமாதிரியான சாப்பாடு'---அரசன்

'உன் சாப்பாட்டை விட ஆடம்பரமான சாப்பாடு'துறவி

அரசனுக்கு ஒரே குழப்பம் "எப்படி உங்களைப்போய் துறவி என சொல்கிறார்கள் மக்கள்? இப்படி பேராசை பிடித்து அலைகிறீர்கள்...அரசன்.

நாளை தெரிந்துகொள்வாய் அரசே...--- துறவி

மறுநாள் காலையில் துறவி புறப்பட்டு தனது இடத்துக்குபோக வேண்டும், போகும்போதும் அரசனுடைய குதிரையை விட நல்ல குதிரை , அரசனின் உடையை விட நல்ல உடை இப்படி துறவி கேட்க , எல்லாம் தரப்பட்டது. அரசனும் வழியனுப்ப அவருடன் செல்ல ஊர்க்கோடியில் அந்த துறவி தனக்கு கிடைத்த குதிரை, நல்ல உடை அனைத்தையும் திருப்பி அரசனிடமே கொடுத்துவிட்டு
தனது கிழிந்த உடையுடனும் வெறுங்காளுடனும் நடக்க.....

அரசன் 'இன்று தெரியும் என்று சொன்னீர்களே...'

'என்னால் நேற்று கிடைத்த அத்தனை சுகத்தையும் , வசதியையும் ஒறே நொடியில் தூக்கி எறிந்து விட்டு வாழ முடியும் அரசே உனக்கு அந்த மனப்பக்குவம் இருக்கிறதா?...துறவியின் கேள்வியில் அரசன் அசந்து விட்டான்.

வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது ஆனால் சொந்தம்

கொண்டாட எதுவும் இல்லை. இந்த தாமரை இலை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன தெரியுமா?...தண்ணீரில் இருந்தாளும் தண்ணீர் ஒட்டாத அந்த சூழல்...நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும் எதுவும் நமக்கு சார்ந்ததல்ல. பல பிரச்சினைகளுக்கு காரணம் ' அது என்னுடையது” என்ற வாதம்தான்.

உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.

.
- ZAKIR HUSSAIN

LABEL:-

உமர் தமிழ்